சாய்ந்தமருதில் இன்றிலிருந்து
3 நாள் தொடர் கடை அடைப்பும்
ஹர்த்தால் அனுஷ்டிப்பும், நோன்பு நோற்றலும்
- யூ.கே. காலித்தீன் -
சாய்ந்தமருது
மக்களின் நீண்டகால
கோரிக்கையான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையானது,
அனைத்துக் கட்சிகளின்
தலைமைகளாளும் அங்கீகரிக்கப்பட்டு இழுத்தடிக்கப்படுகின்ற
நிலையில், அதனை
எதிர் வரும்
உள்ளுராட்சி தேர்தலுக்கும் முதல் பெற்றுக்கொள்ளுமுகமாக அரசுக்கும் சம்மந்தப்பட்ட அரசியல் தலைமைகளும்
அழுத்தத்தை பிரயோகிக்கும் வண்ணம், சாய்ந்தமருது,
மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், உலமா
சபை மற்றும்
பொது அமைப்புகளின்
ஒன்றியமும் ஒன்றினைந்து
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் அதன் தலைவர்
வை.எம்.ஹனிபா தலைமயில்
நடைபெற்ற கூட்டத்தில்
பின்வரும் தீர்மாணங்கள்
மேற்கொள்ளப்பட்டது
* இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை
முதல் தொடர்ச்சியாக
3 தினங்களுக்கு கடையடைப்பு மேலும் தேவையேற்படின் கடையடைப்பை
தொடர்தல்
* வயது
வந்த அனைவரும்
மூன்று நாட்கள்
தொடர்ச்சியாக நோன்பு நோற்று, விஷேட துஆ
பிராத்தனையில் ஈடுபடுவது
* உள்ளூராட்சி
மன்றம் தொடர்பில்
கெளரவ பிரதமர்
மற்றும் சம்மந்தப்பட்ட
முஸ்லிம் அரசியல்
தலைமைகள் வழங்கிய
வாக்குறுதிகள் அது தொடர்பில் சாய்ந்தமருது பள்ளிவாசல்
சமூகம் மேற்கொண்ட
முன்னெடுப்புகள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் பொதுக்
கூட்டமும் இடம்பெற
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை,
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் ஏனைய பொதுஅமைப்புக்கள்
மற்றும் பொதுமக்கள்
முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும்
வகையில் சாய்ந்தமருது,
மாளிகைக்காடு வர்த்தக சங்கமானது இன்று 30 ஆம் திகதி
திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு சாய்ந்தமருது, மாளிகைக்காடு
பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி
பூரண ஹர்த்தால்
அனுஷ்டிக்க அதன் விஷேட கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.
மேலும்
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி அலகு ஒன்றை பெறுவதற்க்காக
2015ம் ஆண்டு
தொடக்கம் உத்தியோகபூர்வ
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகையில் தற்பொழுது
கல்முனை மாநகர
சபையினை நான்காகப்
பிரிக்கவேண்டுமென அரசியல் கட்சிகளின் தலைமைகள் ஊடாக அரசாங்கத்திற்கு
அழுத்தம் கொடுத்துவருகின்றது.
இந்த
நான்கு பிரிவுகளில்
தனியான ஒன்றாக
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை வருகின்றது. எனவே,
சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான உள்ளுராட்சி
சபையை வழங்கிவிட்டு
கல்முனை மாநகர
சபையின் ஏனைய
பகுதிகளை மூன்றாகப்
பிரிப்பது பற்றி
அரசாங்கம் ஏன்
சிந்திக்கக் கூடாது.
மேலும்
சட்டரீதியான எல்லைகளுடன் தனியான பிரதேச செயலக்தைக்
கொண்டுள்ள சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி
மன்ற கோறிக்கையானது எக்காரணம்
கொண்டும் புறக்கனிக்க
முடியாது.
மாறாக
வேறு முடிவுகளால் ஏனைய மூன்று பகுதிளையும்
பிரிக்கும்போது எல்லை முரன்பாடுகள் ஏற்படலாம். எனவே
அதனை சிவில்
சமூகங்களுடன் பேசித் தீர்க்கலாம். இதனை எமது
தலைவர்கள் அரசாங்கத்துக்கு
விளங்கப்படுத்த வேண்டும். தேர்தல்களில் வரிந்து கட்டிக்காண்டு
வரும் தலைவர்களே
இதில் ஏன்
நீங்கள் வாய்மூடி
மௌனம். உங்களால்
ஒரு பிரதேச
சபையைக் கூட
திறந்த மனதுடன்
சிந்தித்துப் பெற்றுத்தர முடியாமல் மழுங்கடிப்பதன் மர்மம்தான்
என்ன?.
கல்முனையில்
தமிழ் உப
பிரதேச செயலகம்
ஒன்று காணப்படுகின்றது.
இது சுமார்
25 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. ஆனால் இதன்
பின்னர் உருவாக்கப்பட்ட
நாவிதன்வெளி, இறக்காமம், சாய்ந்தமருது போன்ற உப
பிரதேச செயலகங்கள்
பிரதேச செயலகங்களாக
தரமுயர்த்தப்பட்டன. ஆனால் கல்முனை
தமிழ் உப
பிரதேச செயலகம் பிரதேச
செயலகமாக இதுவரை
தரமுயர்த்த படவில்லை இதற்கு காரணம் எல்லை
தொடர்பில் தமிழ்
மக்கள் விட்டுக்
கொடுப்புகளை மேற்கொள்ள தயாரில்லை என்பதாகும்.
கல்முனை
மாநகர சபையை
நான்காக பிரிக்கும்
விடயத்திலும் கூட எல்லை தொடர்பில் தமிழ்
மக்கள் விட்டுக்
கொடுப்புகளை முன்வைக்க தயாராக இல்லை. கல்முனை
நகர அபிவிருத்தி
என்பது பகற்கணவாக
இருப்பதற்கு காரணமும் தமிழ் மக்கள் விட்டுக்
கொடுப்பு செய்யாமையாகும்.
எனவே
தெளிவான எல்லைகளை
கொண்டுள்ள சாய்ந்தமருதுக்கு
உள்ளுராட்சி சபை வழங்காமல் நான்கு என்ற
முடிச்சுப் போடுவது அரசியல் சூழ்ச்சியாகும். என்பதில்
எவ்வித கருத்து
வேறுபாடும் கிடையாது.
தனி
அலகு இல்லையேல்
கட்சிகளுக்கு கதவடைப்பு
சாய்ந்தமருதில்
தீர்மானம்.
சாய்ந்தமருது
மக்களின் நீண்ட
நாள் அபிலாஷையான
தனியான உள்ளுராட்சிசபையை
பெற்றுத்தருவதில் இந்தமக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளும் கட்சிகளும்
அசமந்தபோக்கைக் கடைப்பிடிப்பதால் சாய்ந்தமருதுக்கான
உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும்
கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது ஜும்ஆ
பெரிய பள்ளிவாசலின்
தலைவர் வை.எம்.ஹனிபா
தலைமையில் மிகப்பரபரப்புடன்
கூடிய, மரைக்காயர்
சபையினர்,பொது
நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊர்ப்பிரமுகர்களால் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளுராட்சி
சபை விடயமாக
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில்
பல்வேறு முன்னெடுப்புக்கள்
மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரசியல்
பிரமுகர்களால் பகிரங்க வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த மக்களின் நியாயமான
கோரிக்கையை மழுங்கடிக்கும் விதத்தில் கிடப்பில் போடுவதற்கான
முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன அதன் ஒரு கட்டமாகவே
சபையைக் கோரும்
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாது எந்த
கோரிக்கைகளையும் முன்வைக்காத ஏனைய ஊர்களை இணைத்து
சிக்கலாக்க முனைவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அங்கு
நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு;
சாய்ந்தமருது
உள்ளூராட்சி சபை விடயமாக கடந்த செவ்வாய்க்கிழமை
(24)பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற
உயர்மட்ட சந்திப்பில்
கல்முனை மாநகர
சபையை நான்காக
பிரிப்பது எனவும்
அதற்காக பிரதி
அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில்
குழுவொன்றை அமைப்பது எனவும் எடுக்கப்பட்ட தீர்மானமானது
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையை மழுங்கடித்து,
தடுப்பதற்கான செயற்பாடாக நாம் கருதுவதுடன் அதனை
முற்றாக நிராகரிக்கின்றோம்.
மேலும்
அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கும்,சாய்ந்தமருது க்குத்
தனியான உள்ளூராட்சி
சபையை ஏற்படுத்துவதற்குமிடையில்
எந்தவிதத் தொடர்புமில்லை
என்பதை உறுதியாக
அறிவிக்கின்றோம்.
மேற்படி
தீர்மானமானது பிரதமர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
ஆகியோர் ஏற்கனவே
வழங்கிய வாக்குறுதிகளை
மீறும் செயலாகும்.
இவை தொடர்பாக
மொத்தமாக 40 கூட்டங்கள் பல்வேறு தரப்புடனும் நடாத்தப்பட்டு
முடிவடைந்திருக்கின்ற நிலையில் மீண்டுமொரு
குழு நியமனம்
என்பது இவ்வூர்
மக்களை தொடர்ந்தும்
ஏமாற்ற நினைக்கும்
அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகுமென கருதுகின்றோம்.
சாய்ந்தமருதுக்கு
தனியான உள்ளூராட்சி
சபையை வழங்குவதில்
பிரத்தியோகமான எல்லைப்பிரச்சினைகளோ,இனக்கலப்போ
இல்லாமையால் ஏற்கனவே வாக்குறுதியளித்தற்கிணங்க
அதனை உடனடியாகப்
பிரகடனம் செய்யுமாறு
வேண்டுகின்றோம். அதுவரை எமது போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
அவ்வாறு
பிரகடனம் செய்யப்படா
விட்டால் அரசியல்
ரீதியாக எந்தக்
கட்சியோ, அரசியல்வாதிகளோ
தமது அரசியல்
செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எவ்வித ஒத்துழைப்புகளும் வழங்கப்படாது என்பதுடன், அவர்களும் அவ்வாறான
செயற்பாடுகளைத் தவிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
இதற்காக
பொது மக்கள்
அனைவரும் தமது
அரசியல், கொள்கை
வேறுபாடுகளை மறந்து எதிர்காலத்தில் எங்களால் மேற்கொள்ளப்பட
இருக்கின்ற தீர்மானக்களுக்கு ஒத்துழைப்பு
வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும்
சாய்ந்தமருது பள்ளிவாசலில் இடபெற்ற கூட்டத்தில்
சாய்ந்தமருது, ஜும்ஆ பள்ளிவாசல்
நிர்வாகிகளும் வர்த்க சங்கமும் பல்வேறு விடயங்களில்
உடன் பாடு
காணப்பட்டது.
சாய்ந்தமருது
உள்ளூராட்சி மன்றம் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர்
பிரகடனப் படுத்தப்படாத
பட்சத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் சாய்ந்தமருதுக்கு
நம்பிக்கையளித்து ஏமாற்றியது என்ற அடிப்படையில் எதிர்காலத்தில்
கட்சி அரசியலுக்கு
சாவுமணியடித்து, சுயேட்சை அரசியலை முன்னெடுத்து புதுயுகம்
படைக்கும் இந்த
புரட்சிப் பயணத்தில்
சாய்ந்தமருது,
ஜும்ஆ பள்ளிவாசலுடன் வர்த்க
சங்கமும் கைகோர்த்துக்
கொண்டது.
0 comments:
Post a Comment