குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் ஜாபர் முபாரக்
அல் சபா
திடீர் ராஜினாமா
குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் ஜாபர் முபாரக் அல் சபா நேற்று திடீரென்று ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவை குவைத் அமீர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. மந்திரிசபை கலைக்கப்பட்ட நிலையில் புதிய அரசு அமையும் வரையில் அடுத்த தேசிய சட்டமன்ற கூட்டம் நடைபெறாது என சபாநாயகர் மர்சூக் அல் கானிம் கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம்தான் புதிய அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை நடந்த தேசிய சட்டமன்ற கூட்டத்தில் பேசிய சபாநாயகர் மர்சூக் அல் கானிம் நடப்பு அரசு கலைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கருத்து தெரிவித்து இருந்தார்.
தகவல் தொடர்பு மந்திரி முகம்மது அல் சபா பேசும்போது, “சட்டம் இயற்றக்கூடிய பணியில் உள்ளவர்கள் பட்ஜெட் மற்றும் சட்ட விதிகளை மீறி நிர்வாகத்தை சரிவர கவனிக்காததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும்” என்று பேசியதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment