ஒற்றுமைதான் ஏனைய சமூகங்களில் இருந்து

எம்மை வேறுபடுத்திக் காட்டுகின்றது

றிப்கான் பதியுதீன்

மன்னார் முசலி பிரதேச சபைக்குற்பட்ட தம்பட்ட முசலி கிராம இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு நால்வர் கொண்ட கரப்பந்தாட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது

பல கிராமங்களிலும் இருந்து பல விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பிரத்தியோக செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்

நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் " விளையாட்டு என்பது எமது வாழ்வின் ஒரு அங்கம் அதேபோன்று எமக்கிடையே ஒரு ஒற்றுமைப்பாதையினை உருவாக்கக்கூடிய ஒரு அம்சமாகத்தான் இந்த விளையாட்டு காணப்படுகின்றது நான் பல கிராமங்களில் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்விற்கு சென்றிருக்கின்றேன் சில சாந்தப்பங்களில் இறுதிச்சுற்றில் வெற்றி தோல்வியடையும் அணிகள் சண்டையிடுவதனையும் பார்த்திருக்கின்றேன் நாங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் ஒருவர் தோல்வியடைந்தால்தான் மற்றவர் வெற்றியடைய முடியும் ஒரு உண்மையான வீரன் அவை இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவ்வாறு தோல்விகளை ஏற்றுக்கொள்ளாமல் நாங்கள் சண்டையிடுவது எமது சமூகத்தில் இருக்கும் நெருக்கத்தினை நமே நாசமாக்குவது போலாகும் எமது மார்க்கம் தெளிவாக சொல்லி இருக்கின்றது இந்த ஒற்றுமைபற்றி எனவே நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது சமூகத்தை பிளவுபடுத்த விடக்கூடாது அது அரசியல் ரீதியானாலும் சரி விளையாட்டாக இருந்தாலும் சரி ஏனைய விடயங்களானாலும் சரி நாங்கள் பிரிந்து செயல்பட கூடாது உங்களுக்கு தெரியும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் முசலி மண்ணிற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உங்கள் மண்ணிற்காக இருந்தார் ஆனால் இன்று அவரின் நிலை அடையாளமின்றி திரிகின்றார் காரணம் தனியான முறையில் பயணிக்க முட்பட்டதுதான் அதே போன்று மாகாண சபை தேர்தலில் என்னுடன் இணைந்து சகோதரர் அலிகான் ஷரீப் போட்டியிட்டார் இறைவன் நாட்டம் அன்று அவருக்கு மாகாண சபை உறுப்பினராக இறைவன் நாடவில்லை ஆனால் எமது தேசியத்தலைவர் அவர்கள் மக்கள் மீது கொண்ட பாசம் சமூக அக்கறை என்பன ஒன்றிணைந்து இன்று உங்களுக்கு ஒரு பிரதிநிதியை தந்திருக்கின்றது எனவே இளைஞர் இந்த நாட்டினதும் நாட்டின் அபிவிருத்தியினதும் முதுகெலும்பு அவ்வாறு சக்திபடைத்த நீங்கள் ஒற்றுமையாக இருந்து உங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவே நாமும் உங்கள் கிராமத்தின் அபிவிருத்தியில் இளைஞர்களின் வளர்ச்சியிலும் முழு பங்களிப்பு வழங்குவோம் " என தெரிவித்தார்.

A.R.A.Raheem



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top