நான்கு அமெரிக்க நாசகாரிகள்

கொழும்பு துறைமுகம் வந்து சேர்ந்தன

அமெரிக்க கடற்படையின் 11 ஆவது விமானந்தாங்கி தாக்குதல் அணியில் இடம்பெற்றுள்ள நான்கு நாசகாரி போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

அதிவேகப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிரின்சிரோன், நாசகாரிக் கப்பல்களான, யுஎஸ்எஸ் சூப், யுஎஸ்எஸ் பின்க்னி, யுஎஸ்எஸ் கிட் ஆகியனவே கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைந்துள்ளன.

அதிவேக வழிகாட்டல் ஏவுகணைப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிரின்சிரோன், தரை, கடல், வான் எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதிகளைக் கொண்டது.

173 மீற்றர் நீளம் கொண்ட இந்த போர்க்கப்பலில், 60 அதிகாரிகளும், 340 மாலுமிகளும் பணியாற்றுகின்றனர்.

155 மீற்றர் மீற்றர் நீளம் கொண்ட நாசகாரி போர்க்கப்பலான, யுஎஸ்எஸ் பின்க்னியில் 380 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

ஏவுகணைகள், டோபிடோக்கள், 130 மி.மீ பீரங்கி உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களைத் தாங்கிய இந்த நாசகாரியில், இரண்டு சீ ஹோக் உலங்கு வானூர்திகள் தரித்து நிற்கும் வசதிகளும் உள்ளன.


நாசகாரி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் சூப் 155 மீற்றர் நீளம் கொண்டது. இதில் 310 அதிகாரிகளும் கடற்படையினரும் பணியாற்றுகின்றனர்.

ஏவுகணை தொகுதிகள், டோபிடோக்கள், 130 மி.மீ பீரங்கி உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களைத் தாங்கிய இந்த நாசகாரியில், இரண்டு சீ ஹோக் உலங்கு வானூர்திகள் தரித்து நிற்கும் வசதிகள் உள்ளன.

நாசகாரி போர்க்கப்பலான, யுஎஸ்எஸ் கிட், 155 மீற்றர் நீளத்தைக் கொண்டது. இதில் 380 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

ஏவுகணைகள், டோபிடோக்கள், 127 மி.மீ பீரங்கி உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களைத் தாங்கிய இந்த நாசகாரியில், இரண்டு சீ ஹோக் உலங்கு வானூர்திகள் தரித்து நிற்கும் வசதிகளும் உள்ளன.


இதேவேளை, இந்த தாக்குதல் அணியில் உள்ள யுஸ்எஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி கப்பலும், மற்றொரு நாசகாரியான யுஎஸ்எஸ் ஹவார்ட்டும்  கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளன.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top