கல்முனை மாநகரசபையை நான்காகப் பிரிக்கும் வரை

சாய்ந்தமருதுக்கு தனியான சபையை வழங்க முடியாது

பிரதியமைச்சர் ஹரீஸ் சூளுரை




கல்முனை மாநகர சபை நான்கு உள்ளூராட்சி பிரதேசங்களாக பிரிக்கப்படும் வரை சாய்ந்தமருதுவுக்கான தனியான உள்ளூராட்சி சபையை அனுமதிக்கப் போவதில்லை எனவும், இவ்விடயத்தில் தனது அரசியல் வாழ்வு இழக்கப்பட்டாலும் கவலைப்படப் போவதில்லையென்றும் பிரதியமைச்சர் ஹரீஸ் சூளுரைத்துள்ளார்.

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை ஸ்தாபித்தல் தொடர்பாக கல்முனைக்குடி பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மத்தியில் நேற்று முன்தினம் (29) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். கல்முனை ஆஸாத் பிளாஸாவில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய அவர்:
சாய்ந்தமருதிலுள்ள 18000 வாக்காளர்கள் இன்று என்னை ஒரு துரோகியாக பார்க்கின்றனர். அதனைக்கூட பொறுப்படுத்தாது சாய்ந்தமருதை தனியாக பிரிக்காமல் கல்முனை மாநகரினை நான்கு சபைகளாக பிரிக்கச் சொல்லியுள்ளோம்
கல்முனை மாநகர சபையில் இருந்து, சாய்ந்தமருது பிரிக்கப்பட்டு கல்முனை மாநகரம் முஸ்லிம்களிடமிருந்து கைநழுவிப் போவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்கக் கூடாதென அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், றிஸாட் பதியுதீன் மற்றும் பிரதமர் ரணிலுடனும் கேட்டுள்ளேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் எனது தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கல்முனையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக ஏற்படுத்தும் நோக்கில் அக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தியுள்ளேன் என்றார்.
பிரதியமைச்சரின் இவ்வுரை சாய்ந்தமருது பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top