கிரானில் நிலவிய பதற்றமான நிலை

முஸ்லிம் வியாபாரிகள் தங்களது

பொருட்களுடன் வெளியேறினர்
         
மட்டக்களப்பு - கிரான் வாராந்த சந்தையில் இரு சமூகத்தினரிடையே நிலவி வந்த பதற்றமான நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தை பகுதியில் தமிழ் வர்த்தகர்கள் மாத்திரம் பொலிஸ் பாதுகாப்புடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், முஸ்லிம் வியாபாரிகள் தங்களது பொருட்களுடன் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கிரான் வாராந்த சந்தை நடைபெறும் பகுதியிலுள்ள மின் கம்பங்களில் இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத்தடைஎன்ற பதாதைகள் கட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து இப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.
கிரான் பிரதேச மக்கள் ஒன்று கூடி, “குறித்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது, அனைத்து முஸ்லிம் வியாபாரிகளும் வெளியேற வேண்டும்என கூறியுள்ளனர்.
அத்துடன், கிரான் பிள்ளையார் கோவிலின் ஒலி பெருக்கி ஊடாககிரான் வாராந்த சந்தைக்கு வந்த முஸ்லிம் வியாபாரிகள் 30 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும்என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த பகுதியில் மக்கள் அதிகம் ஒன்று கூடியதனால் பதற்ற நிலை எற்பட்டது. நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முகமாக பொலிஸார் அதிகம் குவிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் ஏற்பட்டு ஒரு சில மணி நேரங்களில் முஸ்லிம் வியாபாரிகள் தங்களது பொருட்களுடன் குறித்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top