பாடசாலையில் முதலிடம் பெற்ற மாணவி
சாய்ந்தமருது அரசினர்
முஸ்லிம் கலவன்
பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்.) மாணவி
செல்வி அப்துல்
ஹமீட் பாத்திமா
சாபியா இவ்வருடம்
நடைபெற்ற 5ஆம்
ஆண்டு புலமைப்பரிசில்
பரீட்சையில் 178 புள்ளிகளைப் பெற்று தனது பாடசாலையில்
முதலிடம் பெற்று
பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்..
இவரின்
திறமையை அதிபர்
யூ.எல்.எம். நஸார்
மற்றும் கற்பித்த
ஆசிரியர்கள் என பாடசாலைச் சமூகம் பாராட்டியதோடு,
கல்வி மற்றும்
ஏனைய செயற்பாடுகளில்
தனது திறமையை
வெளிப்படுத்தி வரும் இம்மாணவி, அப்துல் ஹமீட்(சபீக்) மற்றும்
அபூபக்கர் றிஸ்வானா
தம்பதிகளின் இளைய புதல்வியாவார்.
இப்
பாடசாலையில் இந்த மாணவியோடு சேர்த்து 12 மாணவர்கள்
புலமைப்பரிசில் சித்தி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
0 comments:
Post a Comment