சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை
மக்கள் சார்பான மகஜர் கையளிப்பும் அமைதி பேரணியும்"
இன்று 27 ஆம் திகதி
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை
பெறுவது குறித்த "சாய்ந்தமருது மக்கள் சார்பான
மகஜர் கையளிப்பும்
அமைதி பேரணியும்" இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச சபை பிரகடணம் நிறைவேற்றப்பட்டு அதற்கான மகஜரை ஊர் மக்கள் திரண்டு அமைதிப் பேரணியாகச் சென்று சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா அவர்களிடம் கையளித்தனர்.
சாய்ந்தமருது
ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்பாக பிரதான
வீதியில் ஆரம்பமான இந்த அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,
சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கை தொடர்பான இம்மகஜரை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோருக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அங்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஆதம்பாவா ஷார்க்கியினால், விசேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதுடன், பள்ளிவாசல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளால் பிரகடன உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இதன்போது பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இப்பேரணியை முன்னிட்டு சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதிசங்களிலுள்ள ஆறு ஜூம்ஆப் பள்ளிவாசல்களிலும் தனியான உள்ளூராட்சி சபையை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கான போராட்டங்களில் பொதுமக்கள் அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையுடன் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் குத்பா பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன.
.
0 comments:
Post a Comment