ஆச்சரியப்படுத்திய நண்பர்களின் அட்டகாசம்..!
நட்புக்கு இனமில்லை, மொழியில்லை, நிறமில்லை, குணமில்லை,
ஜாதியில்லை , மதமில்லை, வயதுமில்லை
பெருமையின்
காரணமாக அல்ல
பெறாமையின் காரணமாக ஏற்பட்ட பொறாமையினால் என்னுள்
ஏற்பட்ட தாக்கமே
இப்பதிவு…
பொதுவாக
பள்ளிப் பருவ
நட்பு என்பது
பாடசாலை வாழ்க்கை
முடியும் வரை
அல்லது திருமணமாகும்
வரை தான்
ஆண்களாக இருப்பின்
எப்போதாவது சந்தித்து கொள்ள முடியும் என்று
கூறலாம். ஆனால்
பெண்களை பொறுத்தவரை
திருமணத்திற்கு பின் தனது நண்பர்களை சந்திப்பது
என்பது வெறும்
பகல் கனவாகவே
இருக்கும்.
அந்த
பல நாள்
பகல் கனவு
ஒரு நாள்
நிறைவேறினால்… ஆம் கடந்த 29ம் திகதி
ஞாயிற்று கிழமை
அதாவது நேற்று
குருநாகல் மாவட்டத்தில்
வயலும் வயல்
சார்ந்த நிலமுமாகிய
கினியம என்னும்
அழகிய கிராமத்தில்
பல நண்பர்களின்
இந்த பகல்
கனவு நிறைவேறியது.
சிலாபம்
நஸ்ரியா மத்தியக்
கல்லூரியின் 1993ம் ஆண்டு உயர்தரம் எழுதிய
மாணவர்களாகிய அன்பாஸ், அனீஸ், பசீர், பல்கீஸ்,
பிரிட்ஜெட், பாவ்சத், பாலீல், பாரிஸ்(நீதவான்),
பாஹீம், பார்வீன்,
பார்ஷனா, புவனேஸ்வரன்(பிரதி அதிபர்),
இர்பான்(அனர்த்த
முகாமைத்துவ உத்தியோகத்தர்), இம்தியாஸ்,
ஜவ்பர், ஜசீர்,
ஜவாத், மும்தாஸ்,
முஜீப், மஞ்சுளா,
நசீர், நசார்,
நாசிம், நபீஸா,
நஸீமா, நஸ்ரியா,
நஷ்லின், நுஸ்ரத்,
பொற்றாமரை(அரச
உத்தியோகத்தர்), ரனீஸ், ரொஷான(ஆசிரியயை), ரிஸ்வான்,
ரியாஸ், ரியால்,
ரினோசா, சப்ரி(பிரதி அதிபர்),
சப்வான், சதாத்,
சலாகுதீன், சுபைர்(மரண பரிசோதனையாளர்), சர்மினா(கணக்காளர்), ஷிபானி,
சிவகுமார், சாஹிரா(ஆசிரியை), சரூனா (மன்னிக்கவும்
ஏனையவர்களது தொழில் விபரம் தெரியாததால் பதிவு
செய்யப்படவில்லை) ஆகியவர்களே தனது பள்ளிப் பருவ
நண்பர்களை 24 வருடங்களின் பின் மீண்டும் ஒருவரை
ஒருவர் சந்தித்துக்கொண்டனர்.
இந்த
நிகழ்வுவின் போது சந்தித்துக்கொண்ட நண்பர்களின் முகங்களில்
காணப்பட்ட சந்தோசத்தை
வார்த்தைகளால் கூறி விட முடியாது. அதுமட்டுமல்லாமல்
குறிப்பிட்ட ஊர் மக்கள் மத்தியில் இந்த
நிகழ்வு பெரும்
ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல்
ஒவ்வொருவரதும் பழைய பாடசாலை வாழ்க்கை நினைவுகளையும்
ஒரு கணம்
கண் முன்
கொண்டுவந்து நிறுத்தியது.
நட்புக்கு
இனமில்லை, மொழியில்லை,
நிறமில்லை, குணமில்லை, ஜாதியில்லை , மதமில்லை என்று
மட்டுமல்லமால் நட்புக்கு வயதுமில்லை என்று இவர்கள்
நிரூபித்தனர். இந்த சந்திப்பில் முழு ஊரும்
ஜோதி மயமானது.
நண்பர்கள்
என்றால் இவர்களை
போல் தான்
இருக்க வேண்டும்
என்று ஒவ்வொரு
நண்பர்களும் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உன்னதாமான
நட்பு என்றும்
நிலைத்திருக்க வாழ்த்துவதோடு நாம் அனைவருக்கும் எமது
பாடசாலை வாழ்கையை
நினைவுபடுத்திய இவர்களது நட்பு பல்லாண்டு
காலம் நிலைக்க
ஆண்டவனை பிரார்த்திப்போம்.
M.B MOHAMED ARSHAD
0 comments:
Post a Comment