கல்முனை மாநகரத்தினை ஏக காலத்தில்
நான்கு உள்ளூராட்சிகளாக உடனடியாக பிரிக்க வேண்டும்.
கல்முனை மக்கள் பிரகடணம்.
கல்முனை மாநகரத்தின் இருப்பு, நீண்ட கால உள்ளூராட்சி வரலாறு, பிரதேச ஒற்றுமை என்பவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு பக்க
நலனை மட்டும் கருத்திற்கொண்டு சில
முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை யாவரும் அறிந்திருப்பீர்கள்.
நீண்ட நெடிய வரலாற்று பூர்வீகத்தினைக் கொண்ட கல்முனையின் இருப்பு, பாதுகாப்பு, அரசியல் மற்றும் நிர்வாகத்தினை பலவீனப்படுத்தும் முயற்சிகளிலிருந்து கல்முனையை பாதுகாக்கும் பொருட்டு 26-10-2017 வியாழக்கிழமை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளத்தின் அழைப்பில் கல்முனை பெரிய பள்ளிவாசலில் ஒன்று
கூடிய பெரும் சபை
கீழ்வரும் தீர்மானங்களை ‘அல்லாஹு அக்பர்’ கூறி நிறைவேற்றியது. அல்ஹம்துலில்லாஹ்!
தீர்மானங்கள்;
01. கல்முனை மாநகர
சபைப் பிரதேசத்தை 1897ம் ஆண்டு மற்றும் 1936ம் ஆண்டுகளுக்குரிய வர்த்தமானி அறிவித்தல்களின் படி
அமைந்த எல்லைகளுக்குரிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக ஏக காலத்தில் பிரித்து வழங்க
வேண்டும்.
02. தாளவட்டுவான் வீதி முதல்
ஸாகிறா கல்லூரி வீதி
வரையிலான எல்லைகளுக்குரிய கல்முனை பட்டிண சபையை மா நகர சபை அந்தஸ்துடன் பிரித்துத்தர வேண்டும்.
03. அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன் மற்றும் பிரதியமைச்சர் எச். எம். எம்.
ஹரீஸ் ஆகியோரின் உடன்பாட்டுடன் இரு ஊர்ப் பிரதிநிதிகள், கெளரவ பிரதம மந்திரி அவர்களின் பணிப்புரையின் பேரில் கல்முனை மாநகர சபையை
நான்காக பிரித்து வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை குறிப்பிட்ட குறுகிய கால எல்லைக்குள் வழங்க வேண்டும்.
04. கல்முனை மா நகர் நாங்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்கப்படும் வரை
நடைமுறையிலுள்ள மா நகர சபையிலிரிந்து எந்தவொரு பிரதேச சபையும் பிரிந்து செல்ல அனுமதிக்கக்கூடாது.
05. 26-10-2017ம் திகதி பிரசுரிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பான பத்திரிகை விளம்பரம் குறித்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த பத்திரிகை விளம்பரமானது உடனடியாக வாபஸ்
பெற வேண்டும்.
06. கல்முனை மா நகர சபை பிரதேசத்தை நான்கு உள்ளூராட்சி சபைகளாக ஸ்தாபித்தல் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக்கொள்வதால கூறி காலத்தை இழுத்தடிப்பு செய்யாமல் இப்பிரதேச மக்களின் ஒரே கருத்தான நான்கு உள்ளூராட்சி மன்றங்களை அமைச்சின் தத்துணிவைப் பயன்படுத்தி வர்த்தமானி பிரகடணம் செய்ய
வேண்டும்.
07. மேற்கூறப்பட்ட எமது கோரிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாது தட்டிக்கழிக்கப்படும் பட்சத்தில் எமது
கல்முனை பிரதேசத்தில் எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் தமது
அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுடன் இவ்
நடவடிக்கைக்கு ஊர் அரசியல்வாதிகள் கட்டுப்பட வேண்டும் என்று
இப் பெரும் சபை
தீர்மானிக்கிறது.
- அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும்
பொது நிறுவனங்களின் சம்மேளனம்.
கல்முனை.
0 comments:
Post a Comment