புதிய தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு 

தீர்மானிக்கப்பட்டுள்ள

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான

வர்த்­த­மானியில் கைச்­சாத்­தி­ட்டார் பைஸர் முஸ்­தபா.!


புதிய தேர்தல் முறை­யூ­டாக நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலில் சற்றுமுன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி ­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா கைச்­சாத்­தி­ட்டார்.

அவ்­வர்த்­த­மானி அறி­வித்­தலில், ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னதும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் இழு­பறி நிலை­யி­லி­ருந்த அம்­ப­க­முவ மற்றும் நுவ­ரெ­லியா உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும்  தீர்வு காணப்­பட்­டுள்­ளது. எனவே குறித்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை தலா மூன்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாகப் பிரித்­துள்­ள­துடன் அதுவும் இன்­றைய வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top