கல்முனையை நான்காக பிரிப்பதில்
தமிழ் மக்களுக்கு உடன்பாடில்லை!
சாய்நதமருதுக்கு தனியான பிரதேசசபை வழங்கப்படுவதில்
எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை.
ஹென்றி மகேந்திரன் தெரிவிப்பு
கல்முனை மாநகரசபை பிரதேசத்தை நான்காக பிரிப்பதில் கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை என்று ரெலோ கட்சியின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இது திட்டமிட்டு கல்முனை பிரதேச தமிழ்க்கிராமங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் சதி முயற்சியாகும். இதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கப்பபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சர் மனோகணேசன் ஆகியோரை இன்று சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கல்முனையை நான்கு உள்ளுராட்சிசபைகளாகப் பிரிப்பது தொடர்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டபோது நாம் பகிரங்கமாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம். அது எவ்விதத்திலும் எமக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்.
சாய்நதமருதுக்கு தனியான பிரதேசசபை வழங்கப்படுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. அதற்கு எமது தார்மீக பரிபூரண ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், மிகுதிப்பரப்பை மூன்று துண்டுகளாப பிரிப்பது என்பது தமிழ்மக்களை திட்டமிட்டு பிரிக்கச் செய்யும் சதி முயற்சியாகும்.
அது மாத்திரமல்ல பாரம்பரியமாக கல்முனையில் வாழ்ந்து வரும் தமிழ்மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம் என்றும் ரெலோ கட்சியின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.