கல்முனை மாநகரசபைப் பிரதேசத்தை நான்காக பிரி!
அதுவரை சாய்ந்தமருதை பிரிக்காதே!
கல்முனையில் ஆர்ப்பாட்டம்
கல்முனை
மாநகரசபைப் பிரதேசத்தை நான்காகப் பிரிக்கக்கோரியும் சாய்ந்தமருதைப் பிரிக்க வேண்டாமெனக் கோரியும் இன்று
(31) கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை
அனைத்து பள்ளிவாயல்கள்
மற்றும் பொது
நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்த இவ்வார்ப்பாட்டத்தால
கல்முனை மாநகரம்
ஸ்தம்பிதமடைந்துள்ளது.
கல்முனை
பசார் தொடக்கம்
கல்முனைக்குடி வரையிலான கடைகள்யாவும் பூட்டப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இயல்புநிலை
ஸ்தம்பித நிலையடைந்துள்ளது.
பொலிஸார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
விழித்தெழு
கல்முனையானே கொதித்தெழு என்ற துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டன. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனையிலிருந்து
சாய்ந்தமருது தனியே பிரிந்து செல்லுமாயின் கல்முனையில்
முஸ்லிம் பெரும்பான்மை
அழிக்கப்பட்டு
தமிழ் சகோதராகளின்
பிடிக்குள் நமது மாநகரசபையும் மக்களும் அகப்படுவர்
என்பதில் எள்ளளவும்
சந்தேகிக்க வேண்டியதில்லை.
நகரிலுள்ள
அலுவலகங்கள் வங்கிகள் சந்தைத்தொகுதி என்பன இம்மறியல் போராட்டத்தினால்
இயங்கவில்லை.
கல்முனையிலிருந்து
சாய்ந்தமருதைப் பிரிக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம்
என ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பரித்தனர்.
பல
சுலோக அட்டைகளையும்
அவர்கள் தாங்கியவண்ணம்
கோஷம் எழுப்பினர்.
கல்முனை
பொலிஸ்நிலையச்சந்திக்கு அப்பாலுள்ள தமிழ்ப்பிரதேசம்
சுமுகமாக இயங்கியது.
கடைகள் பாடசாலைகள்
அனைத்தும் திறக்கப்பட்டு
இயல்பாகவிருந்தது.
இப்
பேரணி கல்முனை
பிரதேச
செயலாளர் கனியிடம் கல்முனைகுடி அனைத்தும் பள்ளிவாசல்
மற்றும் பொது
நிறுவனங்களின் தலைவர் டாக்டட்.அஸீஸ் அவர்களினானால் மகஜர் கையளிக்கப்பட்டது பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள்
கலைத்து சென்றனர்.
0 comments:
Post a Comment