தரம் 01 இற்கு மாணவர் சேர்க்கும் நிகழ்வுக்கு
அரசியல்வாதிகளை அனுமதிக்க தடை
எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் நடைபெறவுள்ள தரம் 01 இற்கு புதிய மாணவர்கள் சேர்க்கும் தேசிய நிகழ்வுக்கும் அதற்குச் சமாந்தரமாக நடைபெறும் ஏனைய நிகழ்வுகளுக்கும் அரசியல்வாதிகளை சம்பந்தப்படுத்தக் கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு இசிபதான பாடசாலையில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசத்தைக் கலந்துகொள்ளச் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் அனுமதி கோரியுள்ளதாகவும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment