மாகாண சபைகளின் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை
பெப்ரவரி 4ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பு
மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்று மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் தலைவர் கே.தவலிங்கம் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான எல்லை நிர்ணய பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. மூன்று மொழிகளிலும் அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெறுகின்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி மாகாணசபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஐவர் அடங்கிய குழுவை நியமித்திருந்தார்.
குழுவுக்கு நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இந்தக் குறுகிய காலப்பகுதியில் 25 மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடிந்ததாக அவர் கூறினார்.
வாய்மொழி மூலமும், எழுத்து மூலமும் கருத்துக்களும், யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. குழுவின் அறிக்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment