சாய்ந்தமருது சுயேற்சை குழுவைக்கண்டு
மு.காங்கிரஸ் ஏன் பயப்படவேண்டும்..?
அன்று சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கான பிரதேசசபை கோரிக்கையை முன்வைத்தபோது எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்தவர்களில் முக்கியமானவர்கள் பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களும், மு.காங்.தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களும்தான்.
இவர்களின் (வஹ்தா) வாக்குகளை நம்பி பல தடவைகள் சாய்ந்தமருது.பள்ளிவாசல். நிர்வாகத்தினர் கொழும்புக்கும் கல்முனைக்குமாக அலைந்தனர். இந்த விடயம் ஏதோ ஒரு காரணத்தினால் நிறைவேற இருக்கும்போதுதான், இப்படி சாய்ந்தமருது தனியாக பிரிந்தால் கல்முனைக்கு அரசியல்ரீதியான பாதிப்புக்கள் வரும் ஆகவே பிரிப்பதென்றால் நான்காக பிரிக்கவேண்டும் அல்லது பிரிப்பதற்கு நாங்கள் இனங்கமாட்டோம் என்ற விடயம் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களினால் முன்வைக்கப்படுகின்றது.
இந்த வார்த்தையை எதிர்பாராத சாய்ந்தமருது.பள்ளிவாசல் நிருவாகத்தினர், நாட்டின் தற்போதைய நிலை காரணமாக கல்முனையை நான்காக பிரிப்பதென்பது கனவிலும் நடக்காத ஒன்று என்றும், இந்தக் நிபந்தனையானது எங்களை ஏமாற்றும் நடவடிக்கையேயன்றி வேறொன்றுமில்லை என்ற விடயத்தை முன்வைத்தார்கள்.
இந்த நிலையில் அப்படி நீங்கள் தப்பாக எங்களை நினைக்கவேண்டாம், நான்காக பிரிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளுகின்றோம் நீங்கள் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறிவிட்டு, தமிழ் தரப்போடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வரும்போதுதான். உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில். சாய்ந்தமருது.பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு பிரகடணத்தை செய்கிறது அதாவது...எங்களுக்கு யார் பிரதேசசபையை பெற்றுத்தறுகின்றார்களோ அவர்களுக்கு சாய்ந்தமருது மக்கள் வாக்களிப்பதாகவும், அப்படி தேர்தலுக்குமுன் அது நடைபெறாதுவிட்டால் அதனை அடையும்வரை எந்தக்கட்சியையும் ஆதரிக்காமல் சுயேற்சையாக களம் இறங்குவதாகவும் அறிவித்திருந்தது.
தேர்தல் முடிந்த கையோடு எந்தக்கட்சி எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றதோ அந்தக்கட்சியோடு நாங்கள் சேர்ந்து பயணிப்பதில் எந்த தடையும் இல்லையென்றும் அறிவித்துள்ளனர்.
இப்போது விடயத்துக்கு வருவோம்...
சாய்ந்தமருது.பள்ளிவாசல் நிர்வாகம் சயேற்சையாக இறங்குவது தொடர்ந்தும் அரசியல் செய்வதற்காக அல்ல மாறாக தங்களது கோரிக்கை ஏதோ ஒருவகையில் நிறைவேற்றப்பட்டால் தாங்கள் அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவோம் என்றுதான் கூறியுள்ளார்கள். இந்த கருத்தின் பிரகாகரம் சாய்ந்தமருதுக்கான பி.சபையை கொடுப்பதற்கு தமிழ் தரப்பினரோடு மு.காங் பேச்சுவாரத்தை நடத்திக் கொண்டிருப்பதன் நோக்கம் கல்முனையை நான்காக பிரித்தாவது சாய்ந்தமருதுக்கு தனியான ஒரு சபையை வழங்கும் நோக்கமேயாகும். அந்த நோக்கம் உண்மையானதாக இருந்தால் முஸ்.காங் சாய்ந்தமருது விடயத்தில் போட்டிபோட்டு அரசியல் நடத்தவேண்டிய அவசியமில்லை என்றே கூறவேண்டும்.
சாய்ந்தமருது. மக்கள் தங்களுது கோபத்தின் காரணமாக சுயேற்சையாக களம் இறங்கி வெற்றியடைந்தாலும் தேர்தலின் பின் தமிழர்களுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டு தீர்வை பெற்றுக் கொடுத்துவிட்டால் உடனடியாகவே சாய்ந்தமருது மக்கள் மு.காங்கிரஸை பழைய நிலைபோன்று ஆதரிப்பது மட்டுமல்ல, சயேற்சை குழுவும் மு.காங்கிரசாகவே மாறிவிடும் என்பதே உண்மையாகும்.
இதனைக்கருத்தில் கொள்ளாமலும், சாய்ந்தமருது.மக்களுக்கு ஒரு ஆறுதலான செய்தியைச் சொல்லாமலும், அவர்களுடைய உணர்ச்சியை புரிந்து கொள்ளாமலும் அவர்களுடன் மு.காங் மல்லுக்கு நிற்பதைப் பார்த்தால், சாய்ந்தமருது.பள்ளிவாசல் நிர்வாகம் மு.காங்கிரசின் மேல் சந்தேகம் தெரிவிப்பது உண்மையென்றாகிவிடும் அல்லவா?
தங்களை ஏமாற்றுவதற்காகவே, கல்முனையை நான்காக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றார்கள் என்ற சந்தேக பார்வையை ஊர்ஜீதப்படுத்துவதாகவே இவர்களுடைய செயல்பாடு காட்டிக்கொடுக்கின்றது அல்லவா?
மறுபக்கம் நாம் யோசித்தால் சாய்ந்தமருது.பள்ளிவாசல்.நிர்வாகம் வீணாக சந்தேகப்படுகின்றது நாங்கள் இதயசுத்தியுடன்தான் செயல்படுகின்றோம் அதனால்தான் தமிழ் தரப்போடும் பேசுகின்றோம் என்பது உண்மையாக இருந்தால். தேர்தல் நடந்து முடிந்த கையோடு அந்த பேச்சுவார்ததையை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் தீர்வைக் கண்டு அதற்கப்புறம் சாய்ந்தமருதுக்கான சபையையும் பெற்றுக் கொடுத்துவிட்டால் அத்தோடு பிரச்சினை முடிந்துவிடும். அதற்கப்புறம் சாய்ந்தமருது மக்கள் மு.காங்கிரசின் பக்கமே சாய்ந்துவிடுவார்கள் என்பதுதானே உண்மையென்றிருக்கும் போது மு.காங்கிரஸ் சாய்ந்தமருதுக்குள் போட்டி அரசியலை நடத்த முற்பட்டிருப்பது அவர்களின் சண்டித்தனத்தையே காட்டி நிறகின்றது என்பதே உண்மையாகும்.
அப்படியென்றால் இதற்கு சாய்ந்தமருது மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...
0 comments:
Post a Comment