கிழக்கு மக்களை தரக்குறைவாக முகநூலில் பதிவிட்ட
சபீக் ரஜாப்தீனை கட்சியின் மூலம் வழங்கப்பட்ட
சகல பதவிகளிலிருந்தும் நீக்க வேண்டும்
அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு மக்கள் கோரிக்கை
கிழக்கு மக்களின் வாக்குகளால் அமைச்சுப் பதவியைப்பெற்று அதன்மூலம் நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவரான முஸ்லிம்.காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் கிழக்கில் உள்ள மக்களைப் பற்றி தாழ்வான ஒரு எண்ணத்தில் உள்ளார் என்பதை அவரின் முகநூல் பதிவின் மூலம் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முஸ்லிம்.காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் கிழக்கு மாகாணத்தவர்கள் பற்றி உள்ளத்தில் உள்ள அபிப்பிராயத்தை தனது முகநூலில் இவ்வாறு ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
“நாங்கள்
தலைமை தாங்குகின்றவர்கள்,
நீங்கள் எப்போதும்
தலைமை பின்னால்
வருகின்றவர்கள்”
“கிழக்கு
மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள். அரசியல் செல்வாக்குடன் தொழில்களை
பிச்சையாகக் கேட்டு அலைபவர்கள்”.
“கிழக்கு
மாகாணத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள்
வாசல் படிக்கட்டில்
கிழக்கு மாகாணத்தவர்கள்
வந்து கிடப்பீர்கள்.
சுனாமி காலத்தில்
நாங்கள்தான் உங்களுக்கு உதவினோம்”.
இந்தப்பதிவுகள் தற்போது அவரின் முகநூலில் இருந்து அவரால் அகற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மக்கள் அளித்த வாக்குப் பலத்தால்தான் அவரும் நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவராக இருந்து கொண்டிருக்கிறார்.
அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
அவர்கள் அவரை
கிழக்கு மக்களிடம்
மன்னிப்புக் கேட்க வைத்து கிழக்கு மக்கள்
மூலமாக கிடைத்துள்ள
அந்தப் பதவியை
இராஜினாமாச் செய்ய உத்தரவிடல் வேண்டும் இல்லையேல்
அமைச்சரிடமும் கிழக்கு மக்கள் பற்றி அந்த
அபிப்பிராயம் இருப்பதாகவே கிழக்கு மக்கள் நம்ப
வேண்டியிருக்கும் என கிழக்கில் உள்ள மக்கள்
அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment