சல்மானின் ராஜினாமா மக்களை ஏமாற்றி
வாக்குப் பெற்றுக்கொள்ளும் ஒரு யுக்தியா?
ஐக்கிய தேசியக் கட்சியினால் முஸ்லிம் காங்கிஸுக்கு வழங்கப்பட்ட
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எச்.எம். சல்மான், தேர்தல் காலப்பகுதியொன்றில் ராஜினாமா செய்ய முன்வந்தமையானது மக்களை அந்தப் பதவியை வைத்து ஏமாற்றி வாக்குகளைப்
பெற்றுக் கொள்வதற்கான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீமின் ஒரு யுக்தியே
தவிர வேறு சமூக உணர்வுகள் எதுவும் அதில் அடங்கியிருக்கவில்லை என சல்மானின் ராஜினாமா குறித்து
மக்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தை
சிந்திக்கத் தெரியாத அடி முட்டாள்களாக என நினைத்துக் கொண்டு செயல்படுவதையே தேர்தல் காலத்தில் இடம்பெற்றுள்ள சல்மானின்
இந்த ராஜினாமா அமைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சல்மான் வகித்த இந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தேர்தல் முடியும் வரை நிரப்பாமல்
வைத்துகொண்டு கட்சிக்கு பாரிய பின்னடைவாக உள்ள சாய்ந்தமருது மக்களுக்கு வாக்குறுதி
வழங்க முன் வருவார் என ஒரு சாராரும் வன்னியில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை வீழ்த்துவதற்கு வன்னியில் வழங்கப் போவதாக அறிவிப்பார்
என இன்னொரு சாராரும் அட்டாளைச்சேனைக்கு அந்தப்பதவியை இம்முறை நிச்சயம் வழங்குவார் என
மற்றொரு சாராரும் யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதுதவிர தேசியப்பட்டியல் வழங்குவதாக ஹக்கீம் வாக்குறுதியளித்த
ஓட்டமாவடி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்
தமது ஊருக்கு இம்முறை தேசியப்பட்டியல் நிச்சயம் கிடைக்கப் போகின்றது என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கட்சிக்கு பாரிய பின்னடைவாக உள்ள சாய்ந்தமருதில் கட்சியின் தவிசாளர்
முழக்கம் மஜீதுக்கு குறிப்பிட்ட ஒரு சிறிது காலம் (ஆறு மாதங்கள்) வழங்கிவிட்டு பின்னர் வேறு ஒரு இடத்திற்கு இப்பதவியை வழங்க திட்டம்
இருப்பதாகவும் அரசியல் அரங்கில் பேசப்படுகின்றது.
இதேபோன்று வன்னியில்
அமைச்சர் ரிஷாத் பதீயூதினை எதிர்த்து செயல்படுவதற்கு தற்போது முஸ்லிம் காங்கிரஸில்
இணைந்து ரிஷாதுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவரும் ஹுனைஸ் பாறூக்கு வழங்குவதற்கான திட்டம்
ஒன்று ஹக்கீமிடம் இருப்பதாகவும் பேசப்படுகின்றது.
எது எப்படியிருந்த போதிலும் சல்மான் வகித்த இந்த தேசியப்பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கே வழங்கப்படல்
வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்..
அட்டாளைச்சேனையில் இந்த பதவியைப் பெறுவதற்காக மூன்று பேர் பிரயத்தனம்
செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் நசீருக்கு
அந்தப் பதவி கிடைப்பதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.
அட்டாளைச்சேனையில், முஸ்லிம்.காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ மற்றும் அந்தக் கட்சியின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் ஆகியோரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ஹக்கீம் தமக்கு வழங்குவார் என கடும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
கட்சியின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் கட்சியின் தலைவர் ஹக்கீம் ஒரு தடவை மார்க்க கடமைக்காக மக்கா செல்லும் போது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு கிடைக்க மக்காவில் துஆ(பிரார்த்தனை) செய்யுமாறு ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது.
சல்மான் ராஜிநாமா செய்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இப்படியான எதிர்பார்ப்புக்களுடன்பலர் இருந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடியும் வரை யாரையும் நியமிக்காமல் சகல ஊர்களிலும், காட்டாப்பு காட்டும் வேலையைச் செய்யும் திட்டமும் ஹக்கீமிடம் இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது..
எது எவ்வாறாயினும், தேர்தல் காலத்தில் தேசியப்பட்டியலை ஓர் ஊருக்கு ஹக்கீம் வழங்குவாராயின், அந்த ஊர் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான, தேர்தல் லஞ்சமாகவே அது கருதப்படும்.
இதேவேளை,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜினாமா செய்தமை தொடர்பில், தமது கட்சியான முஸ்லிம்
காங்கிரஸ் அறியவில்லை என்று, அந்தக் கட்சியின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி நிஸாம்
காரியப்பர் வானொலியொன்றின் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார் என செய்தி ஒளிபரப்புச்
செய்யப்பட்டது.
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment