ஹக்கீம் காங்கிரஸும் அதன் சேவைகளும்...!
போராளிகள் சொல்லுகின்றார்கள் நான் மு.காங் விமர்சிக்கின்றேன்
என்று. அதற்காகவே
மு.காங்கிரசையும்
அதன் தலைவரையும்
புகழப்போகின்றேன் பாருங்கள்..!
#ஹக்கீம் அவர்கள் தலைமை
பதவியை ஏற்றதன்
பின்தான் முஸ்லிம்
சமூகம் தலைநிமிர்ந்து
வாழத்துவங்கியது.
#ஹக்கீம் அவர்கள் பெண்கள்
விடயத்திலும் மற்ற விடயங்களிலும் நேர்மையாக செயல்படும்
ஒருவர்.
#2002ம் ரணில் பிரபா
ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை
பெற்றுக் கொடுத்தவர்.
#கல்முனை புலிகளினால் தாக்கப்பட்டபோது
ரணிலிடம் சொல்லி
ராணுவத்தை களத்தில்
இறக்கி கல்முனையை
காப்பாற்றியவர்.
#18வது திருத்தச் சட்டத்துக்கு
எதிர்த்து வாக்களித்து
தனது தனித்துவத்தை
பாதுகாத்தவர்.
#மாகாணசபை அதிகாரங்களை பறிக்கும்
சட்டமூலமான "தெவிநெகும" சட்டமூலத்துக்கு
எதிராக துணிந்து
வாக்களித்தவர்.
#அளுத்கம பிரச்சினையின் போது
மஹிந்த அரசாங்கத்தோடு
முரண் பட்டுக்கொண்டு
போராடியவர்.
#அளுத்கமை பிரச்சினையில் ஏற்பட்ட
சேதத்திற்கு நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்க அறும்பாடுபட்டவர்.
#தம்புள்ள பள்ளிவாசலுக்கு நல்லரசாங்கத்தின்
ஊடாக 100பேர்ச்
காணியும் புதிய
பள்ளிவாசலும் கட்டிக் கொடுத்தவர்.
#அதே போன்று மஹியங்கனை,
கிராண்பாஸ், தெஹிவலை பாத்தியா பள்ளிவாசல்களை தொழுவதற்காக
மீட்டுக் கொடுத்தவர்.
#யாழ் முஸ்லிம்களின் மீழ்
குடியேற்றத்தை செய்தது மட்டுமல்ல, அவர்களுக்கான நஷ்டஈட்டையும்
பெற்றுக் கொடுத்தவர்.
#வடக்கும் கிழக்கும் இணையவிடமாட்டேன்
என்று பகிரங்கமாக
கூறிவருபவர்.
#19வது திருத்தம் வந்த
போது அதனை
எதிர்த்து வாக்களித்தவர்,
அதனால் ரணிலின்
கோபத்தை சம்பாதித்தவர்.
##மாகாணசபைகள் தேர்தல் திருத்தம்
வந்தபோதும் அதனை எதிர்த்து வாக்களித்தவர்.
#மாயக்கல்லில் பௌத்த சிலை
வைக்கப்பட்டபோது அதனை உடனடியாக நீக்க நடவடிக்கை
எடுத்தவர்.
#மரிச்சிக்கட்டியை ஜனாதிபதி மறித்துக்
கட்டியபோது அதனை தனியாளாக நின்று வாதாடி
அதனைத் திரும்பவும்
பெற்றுக் கொடுத்தவர்.
#வட்டமடு காணி பிரச்சினையை
சுமுகமாக பேசி
மீட்டுக் கொடுத்தவர்.
#கல்முனை அபிவிருத்திக்கு 600கோடி ஒதுக்கி அபிவிருத்தி செய்தவர்.
#கல்முனை பஸ் தரிப்பிடத்தை
பலகோடி செலவு
செய்து அபிவிருத்தி
செய்தவர்.
#கல்முனையில் கிழக்காசியாவிலே சிறந்த
அழகான பூங்கா
ஒன்றை அமைத்து
தந்தவர்.
#அம்பாரை மாவட்டத்தில் பல
கோடிகளை செலவு
செய்து அபிவிருத்தி
செய்தவர்.
#கரையோர மாவட்டத்தை பெற்றுத்தந்தவர்.
#பொத்துவில் மக்களுக்கு குடி
தண்ணீர் பெற்றுக்
கொடுத்தது மட்டுமல்ல,
அவர்களுக்கு தனியான கல்வி வலயத்தை ஏற்படுத்தி
கொடுத்தவர்.
#சாய்ந்தமருது, மருதமுனை, நற்பட்டிமுனை
போன்ற ஊர்களை
பலகோடி செலவு
செய்து அபிவிருத்தி
செய்தவர்.
#சாய்ந்தமருதுக்கு பிரதேசசபையை பெற்றுக்கொடுத்தவர்.
அதன் காரணமாக
சாய்ந்தமருது மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர்.
#ஒலுவில் துறைமுகத்தை பாரிய
நிதி கொண்டு
அபிவிருத்தி செய்தவர்.
#நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை
முஸ்லிம்களுக்கு மீட்டுக் கொடுத்தவர்.
இப்படி பல சேவைகளை
செய்த இந்த
மகான் ஹக்கீம்
அவர்களை பாராட்டாமல்
இருக்கமுடியுமா?
இது மட்டுமல்ல இன்னும்
எவ்வளவோ சேவைகளைச்
செய்திருக்கின்றார் கால நேரம்
இடம் கொடுக்காததன்
காரணமாக இவ்வளவோடு
நிறுத்திக் கொள்கின்றேன்.
இதுவும் போதுமா இன்னும்
வேண்டுமா போராடிகளே....!
ஆகவே எங்கள் சாணக்கிய
தலைவன் ஹக்கீம்
அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களித்து அமோக
வெற்றியடைய செய்வீர்கள் என்று நினைக்கின்றேன்.
இத்தோடு முடிக்கிறேன்.
புகழ்ந்தது போதுமா? இன்னும்
வேனுமா? இனிமேல்
நான் ஹக்கீமை
புகழவில்லை என்று எந்த நாதாரிப்பயலும் சொல்லக்கூடாது
வரட்டா?
-முனைமருதவன்♥-
0 comments:
Post a Comment