தியாகிகளை தூக்கி எறிந்து விட்டு
ஆமாம் சாமி போடுபவர்களை
தன்னோடு வைத்துக்கொண்டு
கம்பனிகள் போல் கட்சியை நடாத்துகின்றனர்
– அமைச்சர் ரிசாத் பதியுதீன்
தியாகிகளால் உருவாக்கப்பட்ட கட்சியான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தியாகிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஆமாம் சாமி போடுபவர்களை தன்னோடு வைத்துக்கொண்டு
கம்பனிகள் போல் கட்சியை சிலர் நடாத்துகின்றனர் என கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான பிரச்சாரக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.
அமைச்சர் ரிசாத் பதியூதீன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
மேலும் தெரிவித்ததாவது,
இதே நிலை தான் ஹஸன் அலிக்கும் நடந்தது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை இதயம் போல் நேசித்தவர் எம்.ரி ஹசனலி. கட்சியின் ஆணிவேராக இருந்து செயல்பட்டவரை இன்று காதைப் பிடித்து தள்ளிவிட்டது போன்று தள்ளிவிட்டு துரோகிகள் பட்டத்தை அக்கட்சியின்
தலைமைத்துவம் குத்தியுள்ளது
எதிர் வருகின்ற பெப்ரவரி 10 ஆம் திகதி அதி கூடிய வாக்குகளால் திருகோணமலை மாவட்டத்தில் ஆறு உள்ளூராட்சி சபைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் இன்றைய தருணம் மக்கள் எமது கட்சியை உணர்ந்து விட்டார்கள் மூதுரிலே மக்கள் வெள்ளம்போல் அணி திரண்டுள்ளதை கண்டேன் எனவே ஏனைய தேர்தல்களை விடவும் ஆட்சியை இந்த நல்லாட்சி அரசுக்கு நாங்கள் சரியான பாடம் புகட்ட இந்தவாக்குகளை பயன்படுத்த வேண்டும் சிலர் பொய்யான பிரச்சாரங்களை கூறுவார்கள் இந்த தேர்தல் சிறிய தேர்தல் எதையும் சாதிக்க முடியாது என்றெல்லாம் கூறுபோட்டு விடுவார்கள் அதற்கு ஒருபோதும் விலைபோகக் கூடாது.
இந்த மாவட்ட மக்கள் அன்றைய யுத்த கால சூழ்நிலையினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள்ளார்கள் காணியை இழந்துள்ளார்கள் உயிர்களை சொத்துக்கள் என பெறுமதியான பலவற்றை
இழந்துள்ளார்கள்.
இதனை பார்ப்பதற்கு இன்று யாரும் இல்லை என மனவீதனையுடன் கூறுகிறேன் எமது சமூகத்தின் விடிவுக்காக சமூகத்தை தலை நிமிந்து இப் பூமியில் சுதந்திரமாக வாழ்வதற்கு இந்தக் கட்சி உமக்காக எப்பொழுதும் திறந்து கிடக்கிறது எம்மோடு எமது கட்சியில் சமூகத்துக்காக பல நேர்மையானவர்கள் கைகோர்த்து பயணிக்கிறார்கள்..
இந்த நல்லாட்சி அரசினை உருவாக்க பாடுபட்டவர்கள் நாங்களும் தான் தமிழ் முஸ்லிம்களின் சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகளும் பாரிய தாக்கம் செலுத்துகிறது 99 வீதமான மக்கள் தமிழ் முஸ்லிம்கள் ஒறுபட்டே நல்லாட்சியை உருவாக்கினோம் அன்றைய காலகட்டத்தில் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் சிறுபான்மை சமூகத்தின் எமது சமூகத்தின் வாக்குகளின் பெறுமதியை அரசுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.14 வருடகாலமாக ஆட்சிபீடம் ஏறமுடியாத சிறிலங்கா சுதந்திரக் கட்சி சந்திரிகா அம்மையானனரை ஆட்சிபீடமேற்றியதும் ஆர்.பிரேமதாச போன்றோரை ஆட்சிக் கதிரையில் அன்று ஜனாதிபதியாக எமது சமூகத்தின் வாக்குப் பலத்தால் என்பதை நிருபித்துள்ளார்.
எமது சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு இழப்புக்களை சந்தித்துள்ளது திருகோணமலையில் மூதூரிலும் கிண்ணியாவிலும் யுத்த அழிவுகளால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய மூடியாதுள்ளது மூதூரிலே அகதிகளாக இடப்பெயர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள் தற்போதும் கூட விவசாயப் பிரச்சினை காணிப் பிரச்சினை மீனவர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது எமக்குப் புலப்படுகிறது.11 வருடங்கள் கடந்த நிலையில் மூதூரில் சுனாமி வீட்டுத் திட்டங்கள் கிடைக்கப் பெறாமை பொத்துவிலில் காணிப்பிரச்சினை வனவளம் பறிமுதல் செய்துள்ளது இவ்வாறாக பல பிரச்சினைகளை சமூகம் சந்தித்துள்ளது இதை கேட்பதற்கு யாருமில்லை தேர்தல் காலங்களில் மாத்திரம் நாற்பது நாட்கள் சிலர் மக்களை ஏமாற்று நாடகம் நடாத்தி நடிக்கிறார்கள்.
எமது சமூகத்திற்காக சமூகத்தின் விடிவுக்காக குரல் கொடுத்த என்னை இனவாதி எனக்கூறும் மதகுருக்களில் இந்த ஆனந்த தேரர் என்மீது அப்பட்டமான பொய்களை சுமத்தி வில்பத்தை அழிக்கிறேன் காடுகளை அழித்து வீடு கட்டுகிறேன் என பொய்யான பரப்புரைகளை சொல்லித் திரிகிறார்கள் இதற்கு ஜனாதிபதியிடம் சென்று சொன்னேன் உண்மையாக சட்டவிரோதமாக ஏதும் நான் வில்பத்து விவகாரம் தொடர்பில் காணி அபகரிப்பில் ஈடுபட்டால் தண்டியுங்கள் எனவும் ஒரு அங்குலமேனும் வில்பத்தை மறிச்சுக்கட்டியை அழிக்கவில்லை எனக்கூறினார் இவ்விவகாரம் தொடர்பில் குழுவொன்றை உருவாக்கி சரியான முடிவுகளை காட்டுங்கள் என்று கூறியதும் மூன்று மாதங்களின் பின்பு அறிக்கை வருகிறது அந்த அறிக்கையிலே இது தொடர்பில் பாதகங்களை காட்டவில்லை இந்நேரத்தில் சொல்லுகிறேன் அந்த அறிக்கை எங்கே மாயமாக மறைக்கப்பட்டது ஏன் அறிக்கையை வெளியிடுங்கள் .
எனக்கெதிராக பொய்யான குற்றங்களை சுமத்துவதற்காக ஆனந்த தேரர் தலைமையிலான குழுவினர் வில்பத்து புரோடக் எனும் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி விகாரமகாதேவி பூங்காவில் பல இலட்சக்கணக்கான நண்பர்களை அழைத்து பொய்யான வதந்திகளை பரப்பியுள்ளார்கள் இனவாத நஞ்சை கக்குகின்ற இனவாத விசத்தை படம் எடுத்த பாம்புபோல் அப்பட்டமாக என்மீது பலி சுமத்தி சிறையில் அடையுங்கள் அமைச்சை பறிமுதல் செய்யுங்கள் என பல பொய்களை கூறிவருகின்ற இந்த இனவாதிகளுக்கு சொல்லுகிறேன் எனக்கு எதிராக இது தொடர்பில் ஏழு வழக்குகள் போடப்பட்டுள்ளன இன்னும் எத்துனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை எனது சமூகத்தின் விடிவுக்காக குரல் வலையை நசிக்கினால் தொடர்ந்தும் போராடுவேன்
இந்த நாட்டில் யாருக்கும் அநியாயம் இடம்பெறாத வண்ணம் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழ நினைக்கின்றோம் யாருக்கும் எதிரிகள் நாங்கள் அல்ல இன ஐக்கியத்தை சமூக உணர்வோடு வாழ்பவர்களாக நாங்கள் இருக்கிறோம் இவ்வாறு அமைச்சர் ரிசாத்
பதியுதீன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment