மைத்திரி பிக்பொக்கட் ஜனாதிபதிதான்
நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் விமர்சனம்
பிக்
பொக்கட் ஜனாதிபதி
என்று ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவை, விமர்சித்துள்ள ஐதேகவின் நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.எம்.மரிக்கார், மஹிந்த ராஜபக்ஸவின் முதுகில்
குத்தியது போன்று
அவர் ஐதேகவின்
முதுகிலும் குத்த முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்
கடந்த 10ஆம் திகதி நடந்த மோதல்கள் தொடர்பாக, கருத்து
வெளியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐதேகவினரும்,
கூட்டு எதிரணியினரும்
மாறி மாறி
திருடர்கள் என்று குரல் எழுப்பினர். மக்களுக்கு
திருடர்கள் யார் என்று தெரியும் என
கூறியிருந்தார்.
இதுதொடர்பாக
கொழும்பில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய
நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்,
“ஜனாதிபதி
எம்மை பிக்பொக்கட்
காரர்கள் என்று
அழைத்துள்ளார். ஆம், நாங்கள் பிக்பொக்கட் காரர்கள்
தான்.
மஹிந்த ராஜபக்ஸவின் சட்டைப்
பையில் இருந்த
அவரை, நாங்கள்
தான் பிக்பொக்கட்
அடித்து வெளியே
கொண்டு வந்தோம்
என்பதை, ஜனாதிபதிமறந்து
விடக் கூடாது.
அவரும் ஒரு
பிக்பொக்கட்ஜனாதிபதி தான்.
எமது
ஆதரவுடன் ஜனாதிபதியான பின்னர்,
அடுத்த தேசிய
தேர்தல்களில் எம்முடன் இணைந்து செயற்படாமல் இருப்பதற்கு
அவர் திட்டமிட்டார்”
என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment