மோசடி பணம்
மீள பெற நடவடிக்கை;
குற்றவாளிகள்
தண்டிக்கப்படுவர்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன
மத்திய
வங்கி முறி
மோசடி ஆணைக்குழுவின்
அறிக்கை தொடர்பில்
ஜனாதிபதி விசேட
அறிவித்தல்
மத்திய
வங்கியின் சர்ச்சைக்குரிய
பிணை முறி
மோசடி காரணமாக
ரூபா 11,145 மில்லியன் (ரூபா 1114.5 கோடி ) இற்கும்
அதிகமான நிதி
மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும்
அதனை மீட்கவும்,
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தாம் பின்னிற்கப்
போவதில்லை என
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிணை
முறி மோசடி
தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்ட ஜனாதிபதி
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் பாரிய
ஊழல் மோசடிகள்
தொடர்பான ஜனாதிபதி
ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் இன்று (03) ஜனாதிபதி
வெளியிட்ட விசேட
அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது,
குறித்த
விடயத்தின் மூலம் ஏற்பட்ட மோசடி நிதியான
ரூபா 11,145 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மீட்கவும்
தாம் பின்னிற்கப்
போவதில்லை என்று
ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்னாள்
அமைச்சர் ரவி
கருணாநாயக்கவுக்கு எதிராக ஊழல்
குற்றச்சாட்டுகள் மாத்திரமின்றி போலி சாட்சியம் வழங்கிய
குற்றச்சாட்டும் ஆணைக்குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே,
அவருக்கு எதிராக
போலி சாட்சியம்
வழங்கிமை தொடர்பில்
குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழும் தண்டனை
வழங்க நடவடிக்கை
எடுக்குமாறும் விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
அர்ஜுன் மகேந்திரன்
மற்றும் வங்கி
உத்தியோகத்தினர்களினதும் வெளியிலிருந்து செயற்பட்ட
நபர்களினதும் நிறுவனங்களினதும் பங்கேற்புடனும்
பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனம் சட்டத்திற்கு முரணான
வகையில் இலாபத்தை
ஈட்டியுள்ளது என்பதை இந்த அறிக்கை கூறுகின்றது.
2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி
இடம்பெற்ற பிணைமுறி
ஏலத்தின் மூலம்
பேர்பச்சுவல் நிறுவனம் ஆகக்குறைந்து ரூபா 688 மில்லியன்
(ரூபா 68.8 கோடி) இலாபமாக ஈட்டியுள்ளது.
இந்தத்
தொகையானது இந்த
விசாரணைக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஈட்டிய இலாபமாக
இருப்பதால் இதைவிட கூடுதலான இலாபத்தை இந்நிறுவனம்
ஈட்டியிருக்க கூடுமென ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
விசாரணைகளிலிருந்து
வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டாம் நிலைச்
சந்தையில் இடம்பெற்ற
கொடுக்கல் வாங்கல்களின்
மூலம் பேர்பச்சுவல்
நிறுவனம் ஆகக்குறைந்த
இலாபமாக ரூபா
11 ஆயிரத்து 145 மில்லியனை பெற்றுள்ளது.
அத்துடன்
குறித்த காலப்
பகுதியில் ஊழியர்
சேமலாம நிதி
உள்ளிட்ட இதனுடன்
தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு ரூபா 8,529 மில்லியன்
(ரூபா 852.9 கோடி) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மத்திய
வங்கியின் அப்போதைய
ஆளுநர் அர்ஜுன்
மஹேந்திரன் வழங்கிய உறுதிமொழிகளை நம்பி, பிரதமர்
செயற்பட்டிருக்க கூடாது என ஆணைக்குழு வழங்கிய
விசாரணை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதி
தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட விசேட
அறிக்கை:
Add caption |
0 comments:
Post a Comment