புதிய இறைவரி சட்டம்
காணியை விற்பதன் மூலம் கிடைக்கும்
மொத்த பணத்திற்கும் 10 வீத வரி அறவிடப்படும்
உண்மைக்கு புறம்பான பிரச்சாரம்
நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு
புதிய
உள்நாட்டு இறைவரிச்சட்டத்திற்கு
அமைவாக காணியை
விற்பதன் மூலம்
கிடைக்கும் மொத்த பணத்திற்கும் 10 வீத வரி
அறவிடப்படும் என்று உண்மைக்கு புறம்பான பிரச்சாரம்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க
அமைச்சர் இரான்
விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு
வரி எதுவும்
அறவிடப்படுவதில்லை என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
30ஆம் திகதி
9 இலட்சம் ரூபாவாக
மதிப்பீடுசெய்யப்பட்ட 1பேர்ச் காணி
காணியை 10 இலட்சம்
ரூபாவிற்கு விற்றால் அதில் 1இலட்சம் ரூபாவிற்கு
மாத்திரமே 10 சதவீத வரி அறவிடப்படும் என்று
இராஜாங்க அமைச்சர்
சுட்டிக்காட்டினார்.
இதற்காகவே
இவ்வாறான போலிப்பிரச்சாரம்
மேற்கொள்ளப்படுகின்றது. குடும்பத்தில் அம்மா
அப்பா இருப்பார்களாயின்
இவர்களுக்கு பிள்ளைகளும் இருப்பார்களாயின்
இந்த பிள்ளைகளுக்கு
பரிசாக வழங்கப்படுமாயின்
சொத்துக்கானவரி அறவிடப்படமாட்டாது. மூலதன வரி அறவிடப்படமாட்டாது.
இந்த
மூலதன வரி
இதற்கு அப்பாலே
அறவிடப்படும்.இதனை அறவிடுவதாயின் வருமானமாக எடுத்துக்கொள்வதாயின்
பணம் திரட்டுவதாயின்
அதாவது நேர்மையற்ற
வரி அறவீடாக
அமையும். வரிமூலம்
சமூகத்தில் நேர்மையான நிலையை முன்னெடுப்பதாகும். வரி என்பது ஒருவரிடம் அறவிட்டு
இல்லாதவருக்கு பங்கை அதிகரிப்பதாகும் இதில் பாரிய
நோக்கமுண்டு அதுவே இதனூடக நிறைவேற்றப்படுகின்றது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment