கல்முனை மாநகரம் தமிழர்களின்
கைகளுக்குச் சென்று விடப் போகிறது
தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும்,
வெளுத்துப்போன சாயமும்...



கல்முனை மாநகரம் தமிழர்களின் கைகளுக்குச் சென்று விடப் போகிறது என்று, கல்முனை முஸ்லிம்களுக்கு பூச்சாண்டி காட்டி, தனது அரசியலை இதுவரை காலமும் வெற்றிகரமாகச் செய்து வந்த, பிரதியமைச்சர் ஹரீஸின் சாயம், நேற்று திங்கட்கிழமையன்று கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவுடன் வெளுத்துப் போயிற்று.
தமிழர் ஒருவரை பிரதி மேயராக அரவணைத்துக் கொண்டு, கல்முனை மாநகரத்தில் முஸ்லிம்கள் அரசியல் செய்யலாம் என்று, பிரதியமைச்சர் ஹரீஸ் நிரூபிக்க முயற்சித்துள்ளார்.
எனவே, இனியும் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராகவோ, கல்முனை எல்லை விவகாரம் தொடர்பிலோ தமிர்களைக் காட்டி முஸ்லிம்களைப் பயமுறுத்தும் அரசியலை பிரதியமைச்சர் ஹரீஸ் செய்யக் கூடாது.
அப்படி ஹரீஸ் மேற்கொள்ளும் அரசியல் போலியானதாகும்.
மேலும், முஸ்லிம் சமூகம் மீது அக்கறையுடையவராகவும், முஸ்லிம் சமூகத்தின் காவலனாகவும் ஹரீஸ் தன்னைக் காட்டிக் கொள்வதற்கு எந்த விதத்திலும், அருகதையற்றவர் என்பதையும் நேற்றைய நிகழ்வுகள் காட்டிக் கொடுத்துள்ளன.
- அஹமட் -

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top