நம்பிக்கையில்லா பிரேரணை
46 வாக்குகளால்
தோல்வி
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிரான நம்பிக்கையில்லா
பிரேரணை தோல்வியடைந்துள்ளது.
.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிராக ஒன்றிணைந்த
எதிரணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா
பிரேரணை
46 வாக்குகளால் தோல்வியடைந்தது.
அதனையடுத்து,
நாடாளுமன்றத்தை நாளை காலை வரை ஒத்திவைப்பதாக
சபாநாயகர் கரு
ஜயசூரிய தெரிவித்தார்.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிராக ஒன்றிணைந்த
எதிரணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா
பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும்
கிடைத்தன. 26 வாக்குகள் அளிக்கப்படவில்லை.
சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்த்து வாக்களித்தனர். அமைச்சர்களான
மஹிந்த அமரவீர,
நிமால் சிறிபால
டி சில்வா,
துமிந்த திஸாநாயக்க,
மஹிந்த சமரசிங்க,
விஜித் விஜயமுனி
செய்சா, சரத்
அமுனுகம, இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பெளஸி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதானவாக்கெடுப்பில்
கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை,
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,
பியசேன கமகே,
நிஷாந்த முத்தஹெட்டிகம,
பௌஷி, சிரியாணி
விஜேவிக்ரம ஆகியோரும் வாக்கெடுப்பிற்கு
சமுகமளிக்கவில்லை. ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஆதரித்து வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜேதாச ராஜபக்ச எதிர்த்து வாக்களித்தார்.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிரான நம்பிக்கையில்லா
பிரேரணை மீதான
வாக்கெடுப்பு இரவு 9.33 மணிக்கு ஆரம்பமாகியது.
முதலாவதாக
ரணில் விக்கிரமசிங்கவின்
பெயர் குறிப்பிடப்பட்டு
வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிட்டார்.
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 13இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment