முஸ்லிம் மக்களின் வேதனைகளையும்
பாதிப்பையும் பயன்படுத்தி
அரசியல் ரீதியல் இலாபம் பெற எடுத்த முயற்சி
அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
முஸ்லிம் மக்களின் வேதனைகளையும் பாதிப்பையும் பயன்படுத்தி அரசியல் ரீதியல் இலாபம் பெற எடுத்த முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக் கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நம்பிக்கையில்லா பிரேரணையில் திகன சம்பவத்தை உள்ளடக்கி முஸ்லிம் எம்.பிகளின் ஆதரவை பெறவும் ஆளும் தரப்பு எம்.பிகளை தமது பக்கம் இழுக்கவும் எடுத்த முயற்சியால் அரசாங்கம் மேலும் பலமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் எமக்கு கவலையிருக்கிறது
எனது 24 வருட பாராளுமன்ற அனுபவத்தில் பல நம்பிக்கையில்லா பிரேரணைகளை கண்டுள்ளேன். ஆனால் இது ஆரம்பிக்க முன்னரே காற்றுப் போன யோசனையாக மாறிவிட்டது.
இந்த பிரேரணையினூடாக பின்வரிசை எம்.பிகளின் மனவருத்தங்கள், பிரச்சினைகள் என்பவற்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
பிணைமுறி தொடர்பில் சில பிரச்சினை இருப்பதை ஏற்கிறேன். அதனுடன் தொடர்புள்ளவர்களை தண்டிடக்க வேண்டும். ஆனால் பிரதமரை இலக்கு வைத்து இதனை முன்னெடுப்பதன் நோக்கமென்ன?
தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஆணைக்குழு நியமித்து அவரின் பிரஜா உரிமைரத்து செய்யப்பட்டது. பல வருடங்க்ள கழிந்து இதற்கு ஜே.ஆர் மன்னிப்ப கோரியிருந்தார்.
பிரதமருக்கு எதிரான பிரேரணை என்று கூறினாலும் இது அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணையாகும்.
ஆளும் தரப்பு எம்.பிகளை இழுக்க முன்னெடுத்த முயற்சியால் அரசாங்கம் மேலும் பலமடைந்துள்ளது.
முஸ்லிம்மக்களின் வேதனை.சேதம் என்பவற்றை அரசியல் ரீதியல் லாபம் பெறும் வகையில் திகன சம்பவத்தை நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கி முஸ்லிம் எம்.பிகளின் ஆதரவை பெற எடுத்த முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் எமக்கு கவலையிருக்கிறது. முஸ்லிம்களின் சுய கொளரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இந்த பிரேரணை பிரதமருக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையாக மாறியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கும் இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment