மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு
5 ஆண்டுகள் சிறை
இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது
அரிய
வகை மான்களை
வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட
நடிகர் சல்மான்கானுக்கு
5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம்
ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்
மாநிலம் ஜோத்பூர்
அருகே உள்ள
கான்களி கிராமத்தில்
“ஹம் சாத்
சாத் ஹயன்”
என்ற இந்தி
படத்தின் படப்பிடிப்பு
1998-ம் ஆண்டு
அக்டோபர் 2 ஆம் திகதி நடந்தது.
அன்று
இரவு அரிய
வகை மான்கள்
இரண்டை படப்பிடிப்பில்
இருந்த நடிகர்
சல்மான்கான் வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல
நடிகர் சயீப்அலிகான்,
நடிகைகள் சோனாலி
பிந்த்ரே, தபு,
நீலம் ஆகியோர்
மீதும் குற்றம்
சாட்டப்பட்டது.
ஜோத்பூர்
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்த இந்த
வழக்கில் இன்று
தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
மான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என
நீதிபதி அறிவித்தார்.
அவரை தவிர
மற்ற அனைவரும்
விடுவிக்கப்பட்டனர். சில மணிநேரத்திற்கு
பின்னர் சல்மானுக்கான
தண்டனை விபரங்களை
நீதிபதி அறிவித்தார்.
5 ஆண்டுகள்
சிறை தண்டனை
மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அவருக்கு
விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் உடனடியாக
சிறைக்கு கொண்டு
செல்லப்பட்டார். அவரது தரப்பில் ஜாமீன் கோரி
மனு தாக்கல்
செய்யப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment