நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரின்
50-வது மாடியில் தீவிபத்து
   
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரின் 50-வது மாடியில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் 58 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இதில் மேற்பரப்பில் உள்ள 3 அடுக்குகளை தனது வீடாக மாற்றி வசித்து வருகிறார். ஜனாதிபதி பொறுப்பேற்ற டிரம்ப் பெரும்பாலும் வாஷிங்டன் நகரில் வசித்து வருகிறார்.  
இந்நிலையில், நேற்று மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில் டிரம்ப் டவரின் 50-வது மாடியில் திடீரென தீ பற்றியது. அங்கு பிடித்த தீ மளமளவென பரவியது.
தகவலறிந்து அங்கு ஐந்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 140க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.
டிரம்ப் டவரில் ஏற்பட்ட தீயை போராடி விரைவில் அணைத்த தீயணைப்பு படை வீரர்களுக்கு டிரம்ப் டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வாஷிங்டன்னில் இருந்தனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top