ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட
ஐவர் பலி

கண்டி, பன்வில பிரதேசத்தில் தலுக் ஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஐவர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (07) பிற்பகல் 2.45 மணியளவில் பன்வில பொலிஸ் பிரிவிலுள்ள கண்டி வூலு கங்கையின் கிளை ஆறான தலுக் ஓய, பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில், 03 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வந்த, கடுவெல பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றில் கடமையாற்றும் பணியாளர்களில் ஐவரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top