கூட்டு எதிரணியின் எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு
எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, நிதிக்குற்றப்
புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில், அமைச்சராக இருந்த போது, அரசாங்க
நிதியை முறைகேடு
செய்தார் என்ற
குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 39 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று முற்பகல் நிதிக்குற்றப்
புலனாய்வுப் பிரிவுக்கு அவர் மஹிந்தானந்த அளுத்கமகே அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணைகளின்
பின்னர் சற்று
முற்றர் அவர்
கைது செய்யப்பட்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment