ஐபிஎல் தொடரின் போட்டியில்
சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல்
தொடரின் போட்டியில்
சென்னை சூப்பர்
கிங்ஸ் – பஞ்சாப்
அணிகள் பலப்பரீட்சை
நடத்தின. நாணய
சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில்
பந்து வீச்சை
தெரிவு செய்தது.
பஞ்சாப்
அணியின் தொடக்க
வீரர்களாக களமிறங்கிய
லோகேஷ் ராகுல்,
கிறிஸ் கெயில்
ஜோடி அதிரடியாக
விளையாடியது. இதனால் 8ஆவது ஓவரில் எளிதாக
96 ஓட்டங்களை கடந்தது.
பஞ்சாப்
அணி 20 ஓவர்கள்
முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களை எடுத்தது.
சென்னை அணி
தரப்பில் தாகூர்,
இம்ரான் தாஹீர்
ஆகியோர் தலா
2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து,
198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
சென்னை சூப்பர்
கிங்ஸ் அணி
களமிறங்கியது.
தொடக்க
ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், முரளி விஜய்
ஆடினர். வாட்சன்
11 ஓட்டங்களிலும், முரளி விஜய்
12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி
ஓவரில் சென்னை
அணி வெற்றி
பெற 17 ஓட்டங்கள்
தேவைப்பட்டன, ஆனால் இறுதி
ஓவரில் 12 ஓட்டங்கள்
மட்டுமே எடுத்து
சென்னை அணி
தோல்வி அடைந்தது.
0 comments:
Post a Comment