பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின்
தொழிற்சங்க நடவடிக்கைகள்
கைவிடப்பட்டதாக அறிவிப்பு


பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாஸிம், அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கத்தின் உப தலைவர் எட்வட் மல்வத்த தெரிவித்துள்ளார்.
சகல கல்வி சாரா ஊழியர்களும் நாளை சேவைக்கு திரும்புவார்கள். 15 சதவீத கொடுப்பனவை வழங்குமாறு தாம் கோரியிருந்தாலும், பத்து சதவீத அதிகரிப்பை வழங்குவதற்கு உயர் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 34 நாட்களாக முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து பல்கலைக்கழக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top