கோடை மழை
##############
கோடை மழையில் நனைந்த, மிருகங்கள்
குருவிகள் எல்லாம் கொடுக்கி, ஒதுங்க
கூடுகளில்லாமல் வெளியில் கூக்குரலிடுகின்றன.
மழை ஓய்வில்லாமல் தூறிக் கொண்டிருப்பதால்
குளிரில், மண் அடிமையாகிக் கிடக்கிறது.
பல நாள் வெயிலின் விலங்கில் கிடந்த
பார், விலங்கை உடைத்து
முகமலர்ந்து சிரிக்கிறது.
இயற்கையின் சிரிப்பில் மகிழ்வுற்று
இளங்காற்று, கூதலாகி வீசும் போது,
மரக்கிளைகளிலும், தென்னோலை வட்டுக்களிலும்
கொடுக்கிக் கிடக்கும் பறவைகளும் மிருகங்களும்
அமைதியின் தாலாட்டில் கிடக்கின்றன.
ஞாயிறு, ஞாலத்தை வெறுத்துக் கிடக்க,
மக்கள் வீடுகளிலிருந்து வெளிவரமுடியாமல்
சோம்பிக் கிடக்கின்றனர்.
மண் மலையில் முற்றாக மூழ்கி விட,
மனிதனின் வாழ்க்கை செத்துக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கை ஒளிபெற, வல்லோன் பாரில்
வசந்தத்தை தந்து மகிழ்வானா?
இருளான உலகம், இயற்கை மகிழ்ந்திட
எப்போது ஒளியைக் கொடுப்பானோ ?
- எஸ். முத்துமீரான்
0 comments:
Post a Comment