நம்பிக்கையில்லாப் பிரேரணையை
 கொண்டு வந்தவர்களின்
நோக்கத்தை தோற்கடிப்பதற்கு
பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவு.



பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது.
நேற்று  இரவு(03) கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம் சுமார் நான்கு மணி நேரம் இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது.
பிரேரணையைக் கொண்டுவந்தவர்களின் நோக்கம் நல்லாட்சிக்கு சதி செய்து அதனை கவிழ்ப்பதற்கே என தமது கட்சி உணர்ந்ததாலேயே இந்த முடிவை மேற்கொண்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக நேற்று மாலை பிரதமருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நீண்ட நேர பேச்சுவார்த்தையின் போது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் அம்பாறை, திகன கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நஷ்ட ஈடு வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்ட பின்னரே தமது கட்சியின் அரசியல் உயர் பீடம் கூடி இந்த இறுதி முடிவை மேற்கொண்டது.
-ஊடகப்பிரிவு

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top