கிழக்கு மாகாணத்தவர்களை இழிவு படுத்தியவர்
முஸ்லிம் காங்கிரஸின் பொருளாலராக நியமனம்
கிழக்கு
மாகாணத்தில் நல்ல தலைமைத்துவம் இருக்குமானால், கிழக்கு மாகாணத்தவர்கள் ஏன் எங்கள் பின்னால்
வருகிறீர்கள் என்று, கிழக்கு மாகாணத்தவர்களை
இழிவு படுத்தியவர்
முஸ்லிம் காங்கிரஸின் பொருளாலராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு
மாகாண மக்களால்
சர்ச்சைக்குரியவர் எனக் கருதப்பட்ட
சபீக் ரஜாப்தீன் என்பவரையே
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் தங்கள் கட்சியின் பொருளாலராக நியமித்துள்ளது.
முகநூல்
பதிவொன்று தொடர்பில்
கருத்துத் தெரிவித்த
சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருக்கு சபீக் ரஜாப்தீன்
பதிலளிக்கும் போதே, பின்வருமாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
“நாங்கள்
தலைமை தாங்குகின்றவர்கள்,
நீங்கள் எப்போதும்
தலைமை பின்னால்
வருகின்றவர்கள்”
“கிழக்கு
மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள். அரசியல் செல்வாக்குடன் தொழில்களை
பிச்சையாகக் கேட்டு அலைபவர்கள்.
கிழக்கு
மாகாணத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள்
வாசல் படிக்கட்டில்
கிழக்கு மாகாணத்தவர்கள்
வந்து கிடப்பீர்கள்.
சுனாமி காலத்தில்
நாங்கள்தான் உங்களுக்கு உதவினோம்.
மேலும்
உங்களை முட்டுக்
காலில் நாங்கள்
மண்டியிட வைப்போம்”
என குறிப்பிட்டிருந்தார்.
சபீக் ரஜாப்தீனின் இந்த நடவடிக்கையினால் கட்சி மீதும் தலைமைத்துவம் மீதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்ததுடன், இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கட்சி முக்கியஸ்தர்களும் இதற்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
இதனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்த விடயம் தொடர்பில் சபீக் ரஜாப்தீனிடம் விளக்கம் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்தே முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் பதவியில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு சபீக் ரஜாப்தீன்அறிவித்தார்..
இவரது ராஜினாமா குறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இது மாத்திரமல்லாமல், முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்த சபீக் ரஜாப்தீன் கிழக்கு மாகாண மக்களிடம் மன்னிப்புக்கூட கேட்டிருந்தார்.
இந்நிலையில் கிழக்கு மாகாண மக்களால் சர்ச்சைக்குரியவர்
எனக் கருதப்பட்ட சபீக் ரஜாப்தீன் என்பவரையே முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் தங்கள் கட்சியின்
பொருளாலராக நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment