முகநூல் ஒன்றில் பதிவிட்டதாகக் கூறப்படும் விடயத்தை
செய்தித்தாள் கண்ணோட்டம்  நிகழ்ச்சியில்
தெரிவித்தமை மட்டுமே முஷாரப் விட்ட தவறு
தொலைக் காட்சி நிறுவன அதிகாரி தெரிவிப்பு


முகநூல் ஒன்றில் பதிவிட்டதாகக் கூறப்படும் விடயத்தை சுயாதீன செய்தித்தாள் கண்ணோட்டம்  நிகழ்ச்சியில் தெரிவித்தமை மட்டுமே முஷாரப் விட்ட தவறு என சுயாதீன தொலைக் காட்சி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வசந்தம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாளர் முஷாரப் சுயாதீன செய்தித்தாள் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் சுயாதீன தொலைக் காட்சி நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளதாவது,
"ஓர் அமைச்சரின் மகன் எவ்வித ஆதாரமும் இன்றி தனது முகநூல் ஒன்றில் பதிவிட்டதாகக் கூறப்படும் விடயத்தை முஷாரப் குறித்த நிகழ்ச்சியில் தெரிவித்தமை மட்டுமே அவர் விட்ட தவறு.
இதன் மூலம் குறித்த முகநூலின் பதிவுக்கு அவர் அங்கீகாரம் வழங்க முயற்சித்துள்ளார். . அவர் இவ்வாறு நடந்து கொண்டது தவறான விடயம் என்பதனை நாமும் ஏற்றுக் கொள்கிறோம் இதனை முஷராப் அல்லாமல் வேறு ஒருவர் செய்திருந்தாலும் இதே நடவடிக்கையே அந்த நபர் மீதும் நாம் மேற்கொண்டிருப்போம் என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். "
முஷாரபை காலையில் ஒளிபரப்பாகும் பத்திரிகை செய்திகள் தொடர்பான நிகழ்ச்சியிலிருந்து மட்டுமே தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். வேறு எந்த வகையிலும் அவருக்கு எம்மால் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதிர்வு நிகழ்ச்சியிலிருந்து அவரை நாம் நீக்கவில்லை.
 உள்ளக நிர்வாக ரீதியாக ஒரு விசாரணைக்காகவே குறித்த நிகழ்சியிலிருந்து அவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.எனத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top