பாராளுமன்றத்தில் சிரித்துக்கொண்டு நடமாடிய பிரதமர்



பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்து தினேஷ் குணவர்தன உரையாற்றிக்கொண்டிருந்த போது  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சகஜமான முறையில் சிரித்தவாறு கலந்துரையாடிக் கொண்டிருந்தார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து தினேஷ் குணவர்தன உரையாற்றிக்கொண்டிருந்த போது  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாபீடத்திற்குள் நுழைந்து ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்.
இதனையடுத்து தனது ஆசனத்தில் வந்து அமர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்கவை பார்த்து கிண்டலாக ஏதே கூறினார்.
அதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான லக்ஷமன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக ஆகியோருடன் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
அதன்பின்னர் பிரதமர் எழுந்து சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் அமைச்சர்களுடனும் ஆசனம் ஆசனமாக சென்று பேசிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top