பணம் பெற்றுக்கொண்டு ரணிலுக்கு ஆதரவு
விமல் வீரவன்ஸவுக்கு பதிலடி கொடுத்த மரிக்கார்



சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணம் பெற்றுக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து உரையாற்றிக்கொண்டிருந்த போது தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
பின்னர், அவர் பேசி முடித்து அமர்ந்ததும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எழுந்து, விமலின் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டார்.
பணம் வாங்கியதாக விமல் விரவன்ச தெரிவித்த கருத்து பொய்யானது என அவர் குறிப்பிட்டார். இதன்போது சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top