ஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக
ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்
ஜெனிவாவில்
உள்ள ஐ.நா பணியகத்துக்கான
இலங்கையின் நிரந்தர
வதிவிடப் பிரதிநிதியாக,
ஏ.எல்.ஏ.அசீஸ்
பொறுப்பேற்றுள்ளார்.
ஜெனிவாவுக்கான
இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்கவுக்குப் பதிலாகவே,
ஏ.எல்.ஏ.அசீஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.எல்.ஏ.அசீஸ் நேற்றுமுன்தினம்
ஜெனிவாவில், உள்ள ஐ.நா பணியகத்தின் பணிப்பாளர்
நாயகம் மைக்கல்
முல்லரிடம் தனது பணி நியமன ஆணையை
வழங்கினார்.
26 ஆண்டுகள்
வெளிவிவகாரச் சேவையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட
ஏ.எல்.ஏ.அசீஸ்,
இதற்கு முன்னர்,
வியன்னாவில் 2011 தொடக்கம் 2015 வரை வியன்னாவில், ஐ.நா அமைப்புகளுக்கான
நிரந்தர வதிவிடப்
பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.
புதிய
வதிவிட பிரதிநிதியை
மகிழ்ச்சியுடன் வரவேற்ற பணிப்பாளர் நாயகத்திடம் ஐக்கிய
நாடுகள் சபையின்
ஜெனிவா அலுவலகத்தின்
பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் சில பணிகள் குறித்து
புதிய வதிவிடப்
பிரதிநிதி தெளிவுபடுத்தினார்.
நிலைபேறான அபிவிருத்தியை
இலக்காகக் கொண்டு
இணக்கப்பாட்டு ஆய்வு அறை ஐக்கிய நாடுகள்
சபையின் மகளிர்
சமநிலை திட்டம்
மற்றும் உரிமை
தொடர்பான மூலோபாய
விடயங்கள் இதில்
இடம்பெற்றுள்ளன.
இவற்றின்
முன்னேற்றத்திற்காக பங்களிப்பு வழங்கப்படுவதுடன்
இலங்கை, ஐக்கிய
நாடுகள் சபையின்
ஆயுதங்களை கலைதல்
தொடர்பாக வேலைத்திட்டத்திற்கு
வழங்கப்பட்ட ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குமாறு பணிப்பாளர்
நாயகம் கோரிக்கை
விடுத்தார். இலங்கை அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி
இலக்கை பூர்த்தி
செய்ய முன்னெடுத்துள்ள
திட்டத்தை விபரித்த
வதிவிட பிரதிநிதி,
ஐக்கிய நாடுகள்
சபையுடன் தொடர்ந்து
புரிந்துணர்வுடனும் பயனுள்ள உரையாடலின்
மூலம் இலங்கை
மக்களின் நலன்களை
மேம்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும்
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின்
புதிய இலங்கை
வதிவிட பிரதிநிதி
தெரிவித்தார்.
கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வு பெற்ற
அதிபர்களான் ஹாஜியானி ஆர். அபுசாலிஹு மர்ஹும் அல்-ஹாஜ் எம்.ஏ.அபுசாலிஹு ஆகியோர்களின்
மருமகனுமாவார்.
0 comments:
Post a Comment