சீரற்ற
வானிலை தொடர்பில்
பொதுமக்களுக்கு
எச்சரிக்கை
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பல பாகங்களில் கடும் மழை
பெய்து வருகின்றது. இந்நிலையில், மேல், சப்ரகமுவ,
தென் , மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் கடும்
மழையுடன் இடி மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம்
எச்சரித்துள்ளது.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக
திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்
வீசக்கூடும் எனவும் இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment