சவூதியில் துணைவரின் கைபேசியை
வேவு பார்த்தால் சிறை


சவூதி அரேபியாவில் துணைவரின் கைப்பேசியை வேவு பார்த்தால் அபராதத்துடன் சிறை தண்டனை வழங்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் படி கைப்பேசியை உளவு பார்ப்பது பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு 5 இலட்சம் சவூதி ரியால் அபராதம் அல்லது ஓர் ஆண்டிற்கு மேல் சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும்
சவூதி அரேபியாவில் பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் மனைவி தனது கணவரின் கைப்பேசி உரையாடல்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர். அதன் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top