சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளராக தயாசிறி
– மைத்திரி அதிரடி
சிறிலங்கா
சுதந்திரக் கட்சிக்குள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான
அணி ஒன்று
வலுவடைந்து வரும் சூழலில், கட்சியின் பொதுச்செயலாளராக
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு
நடந்த சிறிலங்கா
சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே
இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த கூட்டத்தில்,
தற்போதைய பொதுச்செயலாளர்
பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாசவுக்குப் பதிலாக,
தயாசிறி ஜெயசேகரவை
பொதுச்செயலாளராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தயாசிறி
ஜெயசேகர, ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பவராவார்.
சுதந்திரக்
கட்சியின் பொதுச்செயலாளராக
பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச சில
மாதங்களே பதவி
வகித்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment