முகாமைத்துவ உதவியாளர் சேவையின்
13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன்
அவசியத்தை வலியுறுத்தி
எதிர்வரும் 27 ஆம் திகதி சுகயீனப் போராட்டம்
இன்று விழிப்புணர்வு நிகழ்வும் ஊர்வலமும்

முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் சுகயீனப் போராட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வும் மற்றும் ஊர்வலமும் இன்று 21 ஆம் திகதி அம்பாறை மாவட்ட செயலகம் முன்பாக பெரும் எண்ணிக்கையான ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

அரசினால் தொடர்ச்சியாக  கண்டுகொள்ளாமல் விடப்படும் முகாமைத்து உதவியாளர்களின் தொழில் உரிமைகள் வருமாறு,
1.   தரம் 1,11.111 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு MN – 4 சம்பளத் திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்.
2.   முகாமைத்துவ உதவியாளர் சேவை அதி சிறப்புத்தர உத்தியோகத்தர்களுக்கு SL - 1 சம்பளத் திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்.
3.   பரீட்சை முறையிலான பதவி உயர்வுகள்.
4.   முகாமைத்துவ உதவியாளர் சேவையைச் சேர்ந்தவர்களின் கடமைப் பொறுப்புக்களை எமது சேவையைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் வழங்குதல்.
5.   2013 முதல் நடைமுறைக்கு கொண்டுவந்த சேவைப் பிரமாணக் குறிப்பினை 2004ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தல்.
6.   முகாமைத்துவ உதவியாளர் சேவை என்பதை முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை என பெயர் மாற்றம் செய்தல்.
-    ஏ.எல்.நூர்தீன்









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top