ஓட்டமாவடியில் வாராந்த சந்தை வேண்டாம், வேண்டும் .
இரு மகஜர்கள் கையளிப்பு
வெள்ளிக்கிழமை சுமூகமான தீர்வு எட்டப்படும் என அறிவிப்பு
ஓட்டமாவடி
பிரதேச சபை
பிரிவில் உள்ள
மீறாவோடை வாராந்த
சந்தை தொடர்ந்தும்
நடைபெற வேண்டும்
என்று கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்களும்
பொது அமைப்புக்களும்
ஏற்பாடு செய்த
பேரணி நேற்று
மீறாவோடையில் இடம் பெற்றது.
பேரணியில்
கலந்து கொண்டோரால்
பிரதேச சபை
தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியிடம்
மகஜர் ஒன்றும்
கையளிக்கப்பட்டுள்ளது.
மகஜரினை
பெற்றுக்கொண்ட தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த
திங்கள் கிழமை
ஓட்டமாவடி பிரதேச
வர்த்தகர்கள் வாராந்த சந்தை வேண்டாம் என்று
தங்களது கோரிக்கை
அடங்கிய மகஜர்
கையளித்துள்ளனர்.
ஆனால்,
தற்போது மீறாவோடை பொது சந்தை வேண்டும்
என்று மகஜர்
தரப்பட்டுள்ளது. எங்களது சபையின் விஷேட கூட்டம்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
அதில் இரண்டு
மகஜர்களுக்குமான சுமூகமான தீர்வினை பெறவுள்ளதாக கூறியுள்ளார்.
மக்களுக்கான
தீர்வினை எவருக்கும்
பாதிப்பு இல்லாமல்
செய்து கொடுக்க
வேண்டிய பொறுப்பு
எங்களுக்கு உள்ளது. கூட்டத்தினை கூட்டலாம் என்ற
நம்பிக்கையில் செவ்வாய்க்கிழமை தீர்வு கிடைக்கப்பெறும் என்று
தெரிவித்தோம்.
எங்களது
மேலதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் விஷேட அமர்வினை
கூட்டுவதற்கு இரண்டு நாள் அவகாசம் கட்டாயம்
தேவை என்பதால்
வெள்ளிக்கிழமை அமர்வினை வைத்துள்ளோம்.
இதேவேளை,
அதில் இரு
சாராருக்ககும் பாதிப்பு இல்லாத வகையில் தீர்வினை
பெற்றுக் கொடுப்போம்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment