டி.ராஜேந்தரின் இளைய மகன்
குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!
டி.ராஜேந்தரின் இரண்டாவது
மகன் குறளரசன்
இஸ்லாம் மதத்துக்கு
மாறியுள்ளார்.
இது
தொடர்பில் இந்திய
ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளதோடு, அது தொடர்பான
வீடியோ காட்சியொன்றும்
வைரலாக பரவி
வருகின்றது.
இயக்குனர்,
நடிகர் டி.
ராஜேந்தருக்கு இரு மகன்கள், ஒரு மகள்.
மூத்த மகன்
சிம்பு ஹீரோவாக
நடித்து வருகிறார்.
இரண்டாவது மகன்
குறளரசன், பாண்டிராஜ்
இயக்கிய ’இது
நம்ம ஆளு’
படத்துக்கு இசையமைத்தார். மகள் இலக்கியாவுக்கு திருமணமாகிவிட்டது.
இந்நிலையில்
தாய் உஷா,
தந்தை டி.
ராஜேந்தர் முன்னிலையில்
குறளரசன் இஸ்லாம்
மதத்துக்கு நேற்று (15) மாறினார். சென்னை அண்ணாசாலை
மெக்கா மசூதியில்
இதற்கான நிகழ்ச்சி
நடந்தது.
இதுபற்றி
டி.ராஜேந்தரிடம்
கேட்டபோது, ‘’எம்மதமும் சம்மதம், ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
என்ற கொள்கையை
பின்பற்றுபவன் நான். எம்மதமும் சம்மதம் என்ற
கொள்ளையை பின்பற்றுவதால்
மகனின் விருப்பத்துக்கு
மதிப்புக் கொடுத்துள்ளேன்.
என்
மூத்த மகன்
சிம்பு சிவ
பக்தர். மகள்
இலக்கியா, கிறிஸ்தவ
மதத்தைப் பின்பற்றுகிறார்.
குரளரசன், இஸ்லாமை
பின்பற்றுகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
"குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம்
மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது,
இஸ்லாத்தை முழுமையாக
ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி
ஜமாஅத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாத்துக்கு மாறினார்.
அவர்
விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை
வைத்துக்கொள்ள ஜமாஅத்தில் கூறியுள்ளனர்.
நானும்
அனைத்து மதத்துக்கும்
பொதுவானவன். நான் நாகூர் தர்கா, வேளாங்கண்னி
கோயில், முருகன்
கோயில் என
அனைத்து ஸ்தலத்துக்கும்
எனது தஞ்சை
சினி ஆர்ட்ஸ்
நிறுவனத்தின் எம்ப்ளம்
அனைத்து மதத்தின்
குறியீடுகளும் கொண்டுதான் வடிவமைத்தேன்"
என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.