இலங்கையில்
முதலீடுகளை மேற்கொள்ளும்
வெளிநாட்டு
முதலீட்டாளர்களுக்
தற்பொழுது உள்ள விசா நடைமுறை
கட்டணங்களில் திருத்தம்
இலங்கையில்
முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கும்
நாட்டின் வதிவிட
விசாவை வழங்குவதற்கு
அரசாங்கம் நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.
இது
தொடர்பாக நேற்று
நடைபெற்ற அமைச்சரவை
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
இலங்கையில்
5 இலட்சம் அமெரிக்க
டொலர்களை முதலீடு
செய்யும் முதலீட்டாளர்களுக்கு
10 வருடக் காலம்
வரையில் இங்கு
வசிப்பதற்கான விசா அனுமதியை வழங்குதல் இலங்கையில்
3 இலட்சம் அமெரிக்க
டொலர் முதலீட்டை
மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 5 வருடக்
காலம் வரையில்
வசிப்பதற்கான விசா அனுமதியை வழங்குதல் மற்றும்
வெளிநாடுகளில் குடியுரிமை அனுமதியை பெற்றுக் கொண்டதினால்
இலங்கை குடியுரிமையை
இழந்துள்ள நபர்களுக்கு
விடயதான அமைச்சரினால்
நியமிக்கப்படும் கால வரையில் நிரந்தரமாக வாழ்வதற்கான
விசா அனுமதியை
வழங்குவதற்காக 1948ஆம் ஆண்டு
இலக்கம் 20 இன் கீழான குடிவரவு மற்றும்
குடியகழ்வு சட்டத்தில் 14 (1) மற்றும்
14 (2) ஆகிய சரத்துக்களில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 14(3அ) என்ற புதிய சரத்தை
உள்வாங்குவதற்கான திருத்த சட்டம் சட்ட தயாரிப்பு
பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக
இந்த திருத்த
சட்ட மூலத்தை
வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் பராளுமன்றத்தில்
சமர்பிப்பதற்காக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை
மற்றும் உள்ளுராட்சிகள்
அமைச்சர் வஜிர
அபேவர்தன சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
0 comments:
Post a Comment