தமிழர் தரப்பில்
எவரும் அழைக்கப்படாத நிலையில்
சாய்ந்தமருது,
கல்முனை உள்ளூராட்சி விவகாரம்
தொடர்பான உயர் மட்டக் கூட்டமா?
காலத்தைக்
கடத்தும் ஒரு ஏமாற்று நாடகமா?
மக்கள் சந்தேகம்!
இக்கூட்டத்தில்
பொறுப்புவாய்ந்த கட்சித் தலைமைகள் என்றவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான
றிசாத்பதியுதீன் ஆகியோர் கட்டாயம் கலந்துகொண்டு இப்பிரச்சினைக்கான ஆலோசனைகளையும் யோசனைகளையும்
வழங்குமாறு அமைச்சர் வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார். அத்தோடு அம்பாறை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம்.
நசீர், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
என இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முக நூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது
சம்மந்தமான பிரச்சினை தமிழர் பக்கம்தான் உள்ளது என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறிக்கொண்டிருந்த
நிலையில் இக்கூட்டத்திற்கு தமிழர் தரப்பில் எவரும் அழைக்கப்படவில்லையா?
அப்படியானால்
சாய்ந்தமருது மற்றும் கல்முனையின் ஏனைய பிரதேசங்களுக்கான உள்ளூராட்சி மன்ற விவகாரம்
தொடர்பில் தீர்வை எட்டுவது சம்பந்தமான எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை
4 மணிக்கு நடத்தும் கூட்டத்தில் எவ்வாறு முடிவு ஒன்றை எட்டப் போகின்றார்கள்?
சாய்ந்தமருது,
கல்முனை உள்ளூராட்சி
விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டம் என்பது மீண்டும்
காலத்தைக் கடத்தும் ஒரு ஏமாற்று நாடகமா? என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
0 comments:
Post a Comment