சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை விவகாரம்
இவர்கள்தான் தடை!
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின்
தலைவர் வை. எம். ஹனிபா தெரிவிப்பு
சாய்ந்தமருது
பிரதேச மக்களுக்கு
உள்ளூராட்சி சபை கிடைக்க விடாமல் முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம்
மற்றும் இக்கட்சியின் பிரதி
தலைவர் இராஜாங்க
அமைச்சர் எச்.
எம். எம்.
ஹாரிஸ் ஆகியோரே
தடை ஏற்படுத்தி
வைத்துள்ளனர் இவ்வாறு சாய்ந்தமருது மாளிகைக்காடு
ஜும்ஆ பெரிய
பள்ளிவாசலின் தலைவர் வை. எம். ஹனிபா
தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதுக்கான
உள்ளூராட்சி சபை தொடர்பாக மக்கள் பணிமனையில் ஊடகவியலாளர்கள்
முன்னிலையில் உரையாற்றியபோதே
இவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
பெரிய
பள்ளிவாசலின் தலைவர் வை. எம். ஹனிபா தொடர்ந்து பேசியபோது மேலும் தெரிவித்ததாவது,
2015 ஆம் ஆண்டுளில்
இருந்து சாய்ந்தமருது
பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை வேண்டும்
என்கிற கோரிக்கையை
சாய்ந்தமருது பிரதேச மக்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
கல்முனை மாநகர
சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களே தனியான உள்ளூராட்சி சபை
கோரிக்கைக்கு சாய்ந்தமருது பிரதேச மக்களை இட்டு
சென்றன. கல்முனை
மாநகர சபையில்
அங்கம் வகித்த
சாய்ந்தமருது மக்கள் பிரதிநிதிகள் தாக்கப்பட்டார்கள்.
சாய்ந்தமருது மக்களுக்கு முற்றிலும் தெரியாத வகையில்
சாய்ந்தமருது பிரதேசத்தின் எல்லைகளும் பறிக்கப்பட்டன.
சாய்ந்தமருது
பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை வேண்டும்
என்ற கோரிக்கை
எமது மக்கள்
சார்பாக முன்வைக்கப்பட்டபோது
முஸ்லிம் எம்.
பிகள் இக்கோரிக்கையை
அடிப்படையில் ஏற்று கொண்டார்கள்.
இதை
நிச்சயம் பெற்று
தருவோம் என்ற
வாக்குறுதியையும் வழங்கினார்கள்.
ஆனால், இன்னமும்
எமக்கான உள்ளூராட்சி
சபை இவர்களால்
பெற்று தரப்படவே
இல்லை. சாய்ந்தமருது
தனியாகப் பிரிந்து செல்கின்ற பட்சத்தில் தமிழர்களிடம்
கல்முனை மாநகர
சபை பறி
போய் விடும்
என்று பூச்சாண்டி
காட்டப்பட்டு வருகின்றது.
சாய்ந்தமருது
பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை பெற்று
தர வேண்டும்
என்ற கோரிக்கையுடன்
சாய்ந்தமருது பிரதிநிதிகள் இது வரையில் 42 தடவைகள்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கொழும்பு இல்லத்துக்கு சென்று இருக்கின்றோம்.
தற்போதய நாடாளுமன்ற
சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் அன்று
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக
இருந்தபோது எமது கோரிக்கையை அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களின் சம்மதத்துடன்
அவருக்கு முன்வைத்தோம்.
சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை
ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை கொண்டு வர
அவர் அன்று சம்மதித்தார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ்
தரப்பில் மேற்கொண்டு
துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இடைக்கால
தேர்தல் வந்தபோது
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தேர்தல் பிரசாரத்துக்காக கல்முனைக்கு வந்த
இடத்தில் சாய்ந்தமருது
பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை பெற்று
தருவார் என்று
ரவூப் ஹக்கீமின்
தேர்தல் கால
பரிந்துரையின் பேரில் வாக்குறுதியை சாய்ந்தமருது மக்களுக்கு
பொது மேடையில் வைத்து பகிரங்கமாக வழங்கினார். சாய்ந்தமருது பிரதேசத்துக்கு
தனியான உள்ளூராட்சி
சபை தரப்படும்
என்ற பிரகடனத்தை
அரசாங்க தரப்பில்
உத்தியோகபூர்வமாக அறிவித்தவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை
சாய்ந்தமருது மக்களாகிய நாம் பார்க்கின்றோம்.
கடந்த
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அப்போதைய உள்ளூராட்சி
மற்றும் மாகாண
சபைகள் அமைச்சர்
பைஸர் முஸ்தபாவை
சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்தபோது அவர் கூட பொது மேடையில்
சாய்ந்தமருது
பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபையை பெற்று
தருவேன் என பகிரங்கமாக வாக்குறுதியை வழங்கினார்.
இதே
நேரம் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் தேசிய காங்கிரஸ்
தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா பேசி
சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை
கிடைக்க வழி
வகை கொண்டு
வந்தார்.
ஆனால்,
சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை
இன்னமும் கிடைக்கவே
இல்லை. அதாவுல்லாவின்
முயற்சியில் ஜனாதிபதியின் ஆசியுடன் அமைச்சரவை தீர்மானம்
மூலமாக கிடைக்க
இருந்த உள்ளூராட்சி
சபையை கிடைக்க
விடாமலும் தடை
ஏற்படுத்தியவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமே
ஆவார். இவரும், இராஜாங்க அமைச்சர்
எச்.எம்.எம்.ஹரீஸுமே
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை
கிடைக்க விடாமல்
தடை போட்டு
வைத்திருக்கின்றனர்.
ஏன்
இவர்கள் இவ்விதம்
தடை போட்டு
வைத்திருக்கின்றனர் என்பது எமக்கு
இன்னமும் புரியவில்லை.
சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை
கிடைத்தால் கல்முனை மாநகர சபை தமிழர்களிடம்
பறி போய்
விடும் என்கிற
பூச்சாண்டியை சாய்ந்தமருது மக்கள் கடந்த உள்ளூராட்சி
தேர்தலில் பொய்ப்பித்து காட்டி இருக்கின்றார்கள்.
அதாவது கடந்த உள்ளூராட்சி
சபை தேர்தலில்
சாய்ந்தமருது சுயேச்சை குழு உறுப்பினர்கள்
போட்டியிட்டு 09 ஆசனங்களை வென்று கல்முனை மாநகர
சபையில் சமப்படுத்துகின்ற
சக்தியாக விளங்குகின்றோம்.
அதே
போல சாய்ந்தமருது
பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படாமல்
இருப்பதற்கு பிரதேசவாதம் காரணமாக இருக்கின்றதோ? என்றும்
கேள்வி எழுகின்றது.
கல்முனை மண்ணுக்கும்
சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் இடையில் பல தசாப்த
காலங்களாக மிக
நெருக்கமான உறவு நிலை எல்லா வகைகளிலும்
இருந்து வருகின்றது.
சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை கிடைக்க
வேண்டும் என்றே
கல்முனை மக்களில்
அநேகர் விரும்புகின்றனர்.
அமைச்சர்
ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கேட்கின்றபோதெல்லாம் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு
தனியான உள்ளூராட்சி
சபையை வழங்குவதற்கு
ஹரிஸே முட்டைக்கட்டையாக
உள்ளார் என்று
எமக்கு கூறுவதை
வழக்கமாக கொண்டு
உள்ளார்.
ஆனால்
இருவரும் ஒரே
மேடையில் ஒன்றாக
குலாவுவதை எம்மால் காண முடிகின்றது. கல்முனையை
சொந்த இடமாக
கொண்டபோதிலும் சாய்ந்தமருதை புகுந்த மண்ணாக கொண்ட
இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் உண்மையில் சாய்ந்தமருது
பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை பெற்று
தர முன்னின்று
உழைக்க வேண்டியவராக
உள்ளார். ஆனால்
அவரின் எதிர்மறையான
நடவடிக்கைகள்தான் சாய்ந்தமருது மக்களாகிய எங்களுக்கு
விந்தையாக உள்ளது. இவ்வாறு வை.எம் ஹனிபா தெரிவித்தார்.
இதில்
இவர் தலைமையிலான
மக்கள் பணிமனை
முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது பிரதேச மக்களின் தனியான
உள்ளூராட்சி சபை கோரிக்கையை வலியுறுத்தி கல்முனை
மாநகர சபை
தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி ஈட்டிய
சுயேச்சை குழு
உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment