ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்
ஈராக்
பெண்ணுக்கு ஒரே சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும்
தற்போது நலமாக
இருப்பதாக மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
ஈராக்கின்
கிழக்கு பகுதியில்
உள்ள தியாலா
மாகாணத்தை சேர்ந்தவர்,
யுசுப் பத்லே.
இவருக்கு திருமணமாகி
ஏற்கனவே 3 குழந்தைகள்
உள்ளனர்.
இந்நிலையில்,
இவரது 25 வயது
மனைவி மீண்டும்
கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த
சில தினங்களுக்கு
முன், அங்குள்ள
மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு
ஒரே பிரசவத்தில்
6 பெண் குழந்தைகளும்,
ஒரு ஆண்
குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும்
தற்போது நலமாக
இருப்பதாக மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே,
ஒரே பிரசவத்தில்
7 குழந்தைகள் பிறந்தது இது 2-வது முறையாகும்.
இதற்கு முன்
கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவி இயோவா
மாகாணத்தை சேர்ந்த
கென்னி மற்றும்
பாப்பி மெக்கே
என்ற தம்பதிக்கு
ஒரே பிரசவத்தில்
3 பெண் குழந்தைகளும்,
4 ஆண் குழந்தைகளும்
பிறந்தன.
கடந்த
ஆண்டு லெபனான்
நாட்டில் உள்ள
செயின்ட் ஜார்ஜ்
பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 3 பெண்
குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள்
பிறந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment