ஒரு மில்லியன் டொலர் சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான
பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ள
இலங்கை தமிழ் பெண்


இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன் ஒரு மில்லியன் டொலர் சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.

179 நாடுகளில் இருந்து கிடைத்த 10,000 விண்ணப்பங்களில் இருந்து இந்த தமிழ் பெண் தெரிவாகியுள்ளார்.

மிஸ் செல்வா என்று மாணவர்களால் அறியப்படும் இந்த ஆசிரியை மேற்கு அவுஸ்திரேலியாவின் ரூட்டி ஹில் என்ற மனித நேய பாடசாலையில் கற்பிக்கிறார்.

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இந்த பரிசுக்காக தெரிவு செய்யப்பட்ட தனி ஒருவராக யசோதை செல்வகுமாரன் பெயரிடப்பட்டுள்ளார்.

10 வயதாக இருக்கும் போது யசோதை அவுஸ்திரேலியாவுக்கு பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு மில்லியன் டொலர் பரிசுக்கான தெரிவுக்காக யசோதை செல்வகுமாரன் எதிர்வரும் மார்ச் மாதம் துபாய்க்கு செல்லவுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top